Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 16/05/2019

இன்றைய நாள் எப்படி 16/05/2019

இன்று!
விகாரி வருடம், வைகாசி மாதம் 2ம் தேதி, ரம்ஜான் 10ம் தேதி,
16.5.19 வியாழக்கிழமை வளர்பிறை, துவாதசி திதி காலை 7:46 வரை;
அதன்பின் திரயோதசி திதி, அதிகாலை 4:00 மணி வரை;
சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:06 வரை;
அதன்பின், சுவாதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : பிரதோஷம். நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம் : மனதில் பெருமித உணர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : பணிகளை குறிந்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறிய அளவிலான போட்டி இருக்கும். அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்வீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

மிதுனம் : எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகள் தரவேண்டாம். நிதானமான அணுகுமுறை நன்மை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியச் செலவுகளுக்கு பணம் கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

கடகம் : உங்கள் நற்செயலுக்கான பலன் தேடிவரும். தொழில், வியாபாரம் வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். அக்கம், பக்கத்தவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவர்.

சிம்மம் : அடுத்தவர் விசயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை சரிசெய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

கன்னி : எடுத்த காரியத்தில் வெற்றியடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும்.

துலாம் : பெருந்தன்மையுடன் நடந்து சுயகவுரவத்தை பாதுகாத்திடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.

விருச்சிகம் : உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

தனுசு : திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் அதிக நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்த இலக்கு எளிதில் நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மகரம் : வாழ்வியல் சிரமங்களை சரிசெய்ய திட்டமிடுவீர்கள். முயற்சிக்கான பலன் ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். செலவில் சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது.

கும்பம் : உங்கள் செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருள் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.

மீனம் : குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னர் செய்த அபிவிருத்தி பணி நல்ல பலன் தர ஆரம்பிக்கும். பணவரவு திருப்திகரமாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 13ம் தேதி, 19.5.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: