Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 16/04/2019

இன்றைய நாள் எப்படி 16/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 2ம் தேதி, ஷாபான் 9ம் தேதி,
15.4.19, திங்கட்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 1:45 வரை;
அதன் பின் துவாதசி திதி, மகம் நட்சத்திரம் இரவு 1:30 வரை;
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண-சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:0 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
பொது : ஏகாதசி விரதம்,பெருமாள் வழிபாடு.

 

மேஷம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். அவர்களிடம் சமயோசிதமாக விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது அவசியம். பிள்ளைகளின் வழியில் செலவு ஏற்படலாம். உடல்நலனில் அக்கறை தேவை.

ரிஷபம்: முழுமனதுடன் பணியில் ஈடுபடுவது அவசியம். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

மிதுனம்: சமூக அக்கறையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர் மற்றும் உறவினர் மனம் மகிழ்ந்து பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வருமானம் திருப்தியளிக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

கடகம்: எண்ணம், செயலில் முரண்பாடு ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக நடந்து கொள்வர்.

சிம்மம்: கடந்த கால உழைப்புக்கான பலன் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். பெண்கள் கலை அம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். உறவினரின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும்.

கன்னி: எவரிடமும் விவாதம் பேசக் கூடாது. நிதானமான பேச்சு நன்மை தரும்.தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.சுமாரான அளவில் வருமானம் கிடைக்கும். பெண்கள் அதிக பயன்தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

துலாம்: பணியில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.தாயின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: மனதில் புத்துணர்வு பிறக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.

தனுசு : நண்பர்களுடன் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய அவகாசம் தேவைப்படும். லாபம் மிதமாக இருக்கும். பெண்களுக்கு திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெற்றோரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கையளிக்கும்.

மகரம்: சமூக நிகழ்வுகள் மனதில் வருத்தம் தரலாம். சுயநலத்துடன் பிறர் தரும் உதவியை ஏற்க வேண்டாம்.அதிக உழைப்பினால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை.நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்: எதிர்ப்பாக செயல்பட்டவர் விலகிச் செல்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

மீனம்: நண்பர்களின் உதவியால் மனம் நெகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.உபரி வருமானத்தால் சேமிப்பு கூடும். குடும்பத்தேவை தாராள செலவில் பூர்த்தியாகும். இஷ்டதெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 22/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...

%d bloggers like this: