Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/09/2019

இன்றைய நாள் எப்படி 15/09/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 29ம் தேதி, மொகரம் 15ம் தேதி,
15.9.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி பகல் 12:16 வரை
அதன் பின் துவிதியை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 2:13 மணி வரை
அதன் பின் ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 — 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 — 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00- – 1:30 மணி
குளிகை : பகல் 3:00- – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : ஆவணி ஞாயிறு விரதம், சூரியன் வழிபாடு

 

மேஷம் : நண்பரின் விமர்சனம் மனதில் வருத்தம் தரலாம். தொழில், வியாபார நடைமுறையில் உள்ள அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

ரிஷபம் : உங்கள் குடும்ப பிரச்னையில் சமூக தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவை பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவி புரிவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம் : அவமதித்தவர் அன்பு பாராட்டுவர். செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். திருப்திகர அளவில் பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்துவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : எவரிடமும் உதவி கேட்க வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியை உருவாக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

சிம்மம் : மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி சிரமம் தரலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில் இலக்கு தாமதமாக பூர்த்தியாகும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்ப தேவைகளுக்கான பண செலவு அதிகரிக்கும்.

கன்னி : உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் அரசு சார்ந்த உதவி பெறுவர்.

துலாம் : மனதில் உற்சாகம் பிறக்கும். முக்கியமான செயலில் சமயோசிதமாக ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் மாற்றம் செய்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : குடும்ப உறுப்பினர் அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். முக்கியமான தேவைக்கு கொஞ்சம் பண கடன் பெறுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

தனுசு : புதிய பணிகளால் அதிருப்தி உண்டாகும். அறிவாற்றலால் சில நன்மை பெறலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். நிர்ப்பந்தத்தின் பேரில் அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.

மகரம் : நண்பரின் உதவி கிடைக்கும். வாழ்வின் முக்கியமான லட்சியம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பண வரவில் வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகர சூழ்நிலை இருக்கும்.

கும்பம் : பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு செய்ய வேண்டும்.தொழில்,வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும்.சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மீனம் : உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இஷ்டதெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

 அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: