Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/08/2019

இன்றைய நாள் எப்படி 15/08/2019

மேஷம் : உங்கள் செயல்களில் வசீகர மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம் : எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் ஆரவாரத்தன்மை தவிர்க்கவும். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர் கூடுதல் பாசத்துடன் நடந்து கொள்வர்.

மிதுனம் : அவசரப்பணி ஏற்படலாம். அக்கம் பக்கத்தவருடன் நீங்கள் அதிகம் பேசக் கூடாது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும்.வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : உங்கள் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும், சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். உபரி பணவருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் : உங்கள் மீது பலரும் நல்ல எண்ணம் கொள்வர். இதனால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.தொழில், வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி : எவரிடமும் ரகசிய விஷயம் சொல்ல வேண்டாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும்.அளவான பணவரவு கிடைக்கும்.சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

துலாம் : உங்களால் பலன்பெற்று நன்றி மறந்தவரை மன்னிப்பீர்கள். தொழில்,வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாகும்.தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மனைவி அதிக அன்பு பாசம் கொள்வார்.

விருச்சிகம் : மனஉறுதியுடன் நேர்மை வழியில் நடை போடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும்.

தனுசு : முக்கியமானபணி நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவீர்கள். திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும்.

கும்பம் : சிலர் உங்களிடம் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் போட்டி உருவாகும். அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம் : திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். நிகழ்வுகள் இனிதாக அமையும். தொழில், வியாபாரம் செழித்து மகிழ்ச்சி பெறுவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர் ஆதரவாக செயல்படுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: