Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 15/08/2018

இன்றைய நாள் எப்படி 15/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 30ம் தேதி, துல்ஹஜ் 3ம் தேதி,
15.8.18 புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 8:29 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:49 வரை;
அதன்பின் சித்திரை நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : கருட பஞ்சமி, பெருமாள் வழிபாடு.

மேஷம்: எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். இஷ்டதெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வர்.

ரிஷபம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதம் உண்டாகும். வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

மிதுனம்: சிலரது பேச்சு உங்களின் மனதை பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. அன்றாட செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். சத்தான உணவு உண்பதும் தகுந்த ஓய்வும் உடல்நலனை பாதுகாக்க உதவும்.

கடகம்: அனைவரிடமும் உயர்வு தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சிறுசெயலும் நேர்த்தியுடன் அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிநிலை அதிகரிக்கும். உபரி பணவரவு சேமிப்பாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனமாக இருப்பர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: பேச்சின் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். புதியவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

துலாம்: கூடுதல் பொறுப்பை ஏற்கும் கட்டாய சூழ்நிலை ஏற்படலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். மிதமான பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்: மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். வாழ்வியல் நடைமுறை சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணியில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும்.

தனுசு: உறவினர் அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வர். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். உபரி பணவரவால் சேமிப்பு உயரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மகரம்: சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை சரிசெய்வது நல்லது. லாபம் சுமார். பெண்களுக்கு குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை உருவாக்கும்.

கும்பம்: நல்ல நண்பரின் உதவி ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

மீனம்: நடைமுறை வாழ்வில் வளர்ச்சி பெற தகுந்த பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் பெருகும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 03/11/2018

இன்று விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 17ம் தேதி, ஸபர் 24ம் தேதி, 3.11.18 சனிக்கிழமை தேய்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: