Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/07/2019

இன்றைய நாள் எப்படி 15/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 30ம் தேதி, துல்ஹாதா 11ம் தேதி,
15.7.19 திங்கட்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 2:42 வரை ,
அதன் பின் பவுர்ணமி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 8:28 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி
ராகு காலம் : காலை 7:30-9:00 மணி
எமகண்டம் : காலை 10:30-12:00 மணி
குளிகை : பகல் 1:30-3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிடம்
பொது : சிவன் வழிபாடு, முகூர்த்த நாள்.

 

மேஷம்: குடும்ப விஷயத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். நண்பர்களால் மனக்கஷ்டம் குறையும்.தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். விஷப் பிராணிகளிடம் விலகவும்.

ரிஷபம்: செயல்களில் திறமை பளிச்சிடும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள். லாபம் சராசரி அளவில் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு உதவி பெற அனுகூலம் உண்டு.

கடகம்: உறவினர் மூலம் நன்மை கிடைக்கும். நீண்ட கால குறிக்கோள் ஒன்று நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். பிள்ளைகளால் மகிழ்ச்சிகரமான சூழல் அமையும்.

சிம்மம்: மனதில் அதிருப்தி உண்டாகலாம்.பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் தடைகள் அகலும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். நிர்பந்தத்தின் பேரில் யாரும் கடன் வாங்க வேண்டாம். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளி்ல் பங்கேற்பர்.

கன்னி: நண்பரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினர் அதிக அன்பு பாசம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். தியானம், தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

துலாம்: நண்பரின் தேவையறிந்து உதவுவீர்கள். இஷ்டதெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாயம் பெருகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம்: எதிர்பார்ப்புடன் சிலர் உதவிக்கரம் நீட்டுவர். கூடுதல் உழைப்பால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை காண்பீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வேண்டாம். பெண்கள் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

தனுசு: அவமதித்தவரும் அன்பு பாராட்டும் சூழ்நிலை உருவாகும். திட்டமிட்ட செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயல்வீர்கள்.

மகரம்: அனைவரிடமும் எதார்த்தமாக பழகுவீர்கள். மற்றவர் சூழல் அறிந்து செயல்படவும். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்புப் பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம்: பிறர் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். திட்டமிட்ட செயல் ஒன்றில் அதிக நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவு அதிகரிக்கும்.புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மீனம் : குடும்ப விவகாரத்தில் தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: