Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/05/2019

இன்றைய நாள் எப்படி 15/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 31ம் தேதி, ரம்ஜான் 8ம் தேதி,
15.5.19 புதன்கிழமை வளர்பிறை, தசமி திதி பகல் 12:03 வரை;
அதன்பின் ஏகாதசி திதி, பூரம் நட்சத்திரம் காலை 8:02 வரை;
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : முருகன், துர்க்கை வழிபாடு.

 

மேஷம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் நிறைந்து புத்துணர்வு பெறுவீர்கள். தொழிலில், உற்பத்தி விற்பனை அதிகரிக்க சிலமாற்றம் செய்வீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். வெகுநாள் பிரச்னை சுமுக தீர்வு பெறும்.

ரிஷபம் : பொறுப்புணர்வும், அறிவாற்றலும் சில நன்மை தரும். தொழில், வியாபார நடைமுறையில் சுமுக நிலை இருக்கும். சிறிது பணக்கடன் பெற நேரிடலாம். நிர்பந்தத்தின் பேரில் பொருட்கள் வாங்க வேண்டாம்.

மிதுனம் : எதார்த்தமாக பழகுவீர்கள். அடுத்தவரின் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். சேமிப்புப் பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம் : ஒரு சிலரின் அனுசரணையான உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகர சூழ்நிலை இருக்கும்.

சிம்மம் : சிலரின் விமர்சனம் மனதில் வருத்தம் தரலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள் .மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

கன்னி : நண்பருக்கு தேவையான உதவியை வழங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆதாய பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள் .விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம் : குடும்ப உறுப்பினரின் பாச மழையில் நனைவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும்.

விருச்சிகம் : உங்களைப்பற்றி நல்ல மதிப்பு, மரியாதை உருவாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். உபரி பணவருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு : குடும்ப விவகாரத்தில் முக்கியமான தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப் பணம் வசூலாகும். நீண்ட கால நண்பரை சந்திக்க வாய்ப்புண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மகரம் : உங்களுக்கு சிலர் சொல்லும் அறிவுரை சங்கடத்தை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும்.

கும்பம் : குழப்பம் நீங்கி மனநிம்மதி காண்பீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பருக்கு உதவுவீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

மீனம் : முக்கியமான செயல் ஒன்றில் அதிக கவனமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: