Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 15/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 15/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், தை மாதம் 1ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 19ம் தேதி,
15.1.20 புதன்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி மாலை 4:03 வரை,
அதன் பின் சஷ்டி திதி பூரம் நட்சத்திரம் காலை 9:42 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி
ராகு காலம்: பகல் 12:00-1:30 மணி
எமகண்டம்: காலை 7:30-9:00 மணி
குளிகை: காலை 10:30-12:00 மணி
சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: சதயம்
பொது பொங்கல், சூரியன் வழிபாடு, மகர ஜோதி, கரிநாள்

 

மேஷம்: சிலர் உங்களிடம் பொறாமை கொள்வர். தொழில், வியாபாரத்தில் போட்டி உருவாகும். அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராகும்.பணவரவை விட செலவு அதிகரிக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வாக்குவாதம் தவிர்க்கவும். பணவரவில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படும்.குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர்.

மிதுனம்: செயல்களில் வசீகரம் வெளிப்படும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

கடகம்: பணி நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் சச்சரவு பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

சிம்மம்: பலன்பெற்று நன்றி மறந்தவரை மன்னிப்பீர்கள். தொழில்,வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாகும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மனைவி அதிக பாசம் கொள்வார்.

கன்னி: எவரிடமும் ரகசியம் சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தாய்வழி உறவினர்கள் உதவுவர்.

துலாம்: இஷ்ட தெய்வத்தின் அருள் பெறுவீர்கள். திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன்,பொருள் சேரும்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். நிகழ்வுகள் இனிதாக அமையும். தொழில், வியாபார வளர்ச்சியால் மகிழ்ச்சி பெறுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். உறவினர் ஆதரவாக செயல்படுவர்.

தனுசு: மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு அமைதி தரும்.

மகரம்: அவசரப்பணி ஏற்படலாம். அக்கம் பக்கத்தவருடன் அதிகம் பேசக் கூடாது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

கும்பம்: பலரும் நல்ல எண்ணம் கொள்வர். இதனால் மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்: மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எதிலும் சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபார செழிப்பால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 31/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 16ம் தேதி, துல்ஹஜ் 9ம் தேதி, 31.7.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...