Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 14/12/2017

இன்றைய நாள் எப்படி 14/12/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 28ம் தேதி, ரபியுல்அவ்வல் 24ம் தேதி,
14.12.17 வியாழக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி காலை 6:35 வரை;
அதன் பின் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம் இரவு 1:42 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30 -12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30 -3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00 -7:30 மணி
* குளிகை : காலை 9:00 -10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
பொது : பெருமாள் வழிபாடு. சுபமுகூர்த்தநாள்.

 

மேஷம் : சிரமங்களை வெல்லும் திறன் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி சிறப்பாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

 

ரிஷபம் : அனுபவ அறிவு நன்மை தரும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். உறவினர்க்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

 

மிதுனம் : உடல்நலத்தில் கூடுதல் கவனம் வேண்டும். பணிகள் நிறைவேற நண்பர் உதவுவர். தொழில், வியாபாரம் சார்ந்த சிரமங்களை ஓரளவு சரியாகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.

 

கடகம் : மன சஞ்சலம் செயல்களை தாமதப்படுத்தும். மூத்தோரின் ஆலோசனை நன்மை தரும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபார நடைமுறை சீராகும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்

 

சிம்மம் : எதிர்பார்த்த காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

 

கன்னி : சொந்த நலனில் அக்கறை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி தாமதமாகலாம். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவர்.

 

துலாம் : செய்த உதவிக்கான நற்பலன் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். பெண்கள் நகை புத்தாடை வாங்குவர்.

 

விருச்சிகம் : எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவில் ஓரளவு முன்னேற்றம் உண்டு. நிர்ப்பந்தத்தின் பேரில் பொருட்கள் வாங்க வேண்டாம்.

 

தனுசு : ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவீர்கள். உங்களின் பேச்சை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வளர்ச்சி நிலை இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
 மகரம் : மனதில் தெய்வீக சிந்தனை வளரும். அறிமுகம் இல்லாதவருக்கும் உதவி புரிவீர்கள். தொழில், வியாபாரம் சிறந்து வாழ்க்கைத் தரம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.
கும்பம் : உறவினர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். தொழில், வியாபாரம் செழிக்க சில சீர்திருத்தம் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். குழந்தைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். தேவை உணர்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ளவும்.
மீனம் : சுயபெருமை பேசுவதால் சிலர் அதிருப்தி கொள்வர். தொழில், வியாபார நடைமுறை சிறக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும். நித்திரை தாமதமாகலாம்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: