Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 14/11/2018

இன்றைய நாள் எப்படி 14/11/2018

இன்று!

விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 28ம்; தேதி, ரபியுல் அவ்வல் 5ம் தேதி,
14.11.18 புதன்கிழமை வளர்பிறை, சப்தமி திதி நாள் முழுவதும்,
உத்திராடம் நட்சத்திரம் காலை 6:15 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொது : முகூர்த்த நாள், திருவோண விரதம். பெருமாள் வழிபாடு.

மேஷம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். இனிதாக வாழ்க்கை நடத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவர்.

ரிஷபம்: சிலர் உங்களை சுயநலத்துடன் அணுகுவர். அவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

மிதுனம்: நிதானமான செயல்படுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். லாபம் மிதமாக வரும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. தியானம், தெய்வ வழிபாட்டால் குடும்ப பிரச்னை தீரும்.

கடகம்: சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். துவங்குகிற பணி முழு அளவில் வெற்றியைத் தரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். வெகுநாள் சந்திக்க நினைத்த நண்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்: செயலில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும்.தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும்.பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: சிலரது பேச்சு சங்கடம் உருவாக்கும். கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உணவு தரம் அறிந்து உண்ணவும்.

துலாம்: எண்ணம், பேச்சில் கட்டுப்பாடு அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். நிர்வாகத்தில் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வாகனப் போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்: மனதில் இரக்க குணம் மேலோங்கும். நற்செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். அதிக வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

தனுசு: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரம சூழ்நிலையை தாமதமின்றி சரி செய்யவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். .உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

மகரம்: அதிர்ஷ்டகரமான வாய்ப்பு உங்களை தேடி வரும். மனதில் கவலை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். பணவரவில் திருப்திகரமான சூழல் உருவாகும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர்.

கும்பம்: சிறிய பணி கூட சுமை போல தோன்றும். தொழில், வியாபாரம் சிறக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் அறிமுகம் இல்லாதவரிடம் நெருங்கிப் பழக வேண்டாம்.

மீனம்: செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு. உறவினர்களின் வீட்டு விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: