Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/09/2019

இன்றைய நாள் எப்படி 14/09/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 28ம் தேதி, மொகரம் 14ம் தேதி,
14.9.19 சனிக்கிழமை, தேய்பிறை, பவுர்ணமி திதி காலை 10:19 வரை
அதன் பின் பிரதமை திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 11:49 வரை
அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண – -சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 — 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 — 3:00 மணி
குளிகை : காலை 6:00- – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மகம், பூரம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு, கரிநாள்.

 

மேஷம் : மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.

ரிஷபம் : இனிய அனுபவத்தை உறவினரிடம் சொல்வீர்கள். அவர் மனதில் உங்களை பற்றி நல்ல மதிப்பு உருவாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். உபரி பண வருமானம் கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் : பிறருக்கு நல்லதை செய்தும் மன வருத்தம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழிலில் கூடுதல் பணி புரிவதால் வளர்ச்சி கூடும். பண வரவு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உணவு பொருள் தரமறிந்து உண்ணவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். அவப்பெயர் வராதபடி செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் கூடுதல் முயற்சியால் சீராகும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

சிம்மம் : சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு தேடி வரும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். நிலுவை பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவி புரிவீர்கள்.

கன்னி : மனதில் இருந்த திட்டம் செயல் வடிவமாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம் : அவசர பணி உருவாகி அல்லல் தரலாம். கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

தனுசு : பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரம் புதிய யுக்தியால் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மனைவியின் அதிக அன்பு, பாசம், மகிழ்ச்சி தரும்.

மகரம் : அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை தாமதமின்றி சரி செய்வது நல்லது. முக்கிய செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : தாமதமான செயலில் அனுகூல பலன் தேடி வரும். உங்களின் தனி திறமையை பலரும் அறிந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பண பரிவர்த்தனை சீராகும். வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள்.

மீனம் : வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். சொந்த பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். அளவான பண வரவு கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

செப்டம்பர் 23,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, ஸபர் 5ம் தேதி, 23.9.2020 புதன்கிழமை, வளர்பிறை, ...