Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/07/2019

இன்றைய நாள் எப்படி 14/07/2019

இன்று!
விகாரி வருடம், ஆனி மாதம் 29ம் தேதி, துல்ஹாதா 10ம் தேதி,
14.7.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, திரயோதசி திதி இரவு 2:28 வரை
அதன் பின் சதுர்த்தசி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 7:33 வரை
அதன் பின்; மூலம் நட்சத்திரம், மரண-அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00-1:30 மணி
குளிகை : பகல் 3:00-4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
பொது : பிரதோஷம், சிவன், நந்தீஸ்வரர், சூரியன் வழிபாடு.

 

மேஷம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். பொருட்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் உதவி உண்டு.

மேஷம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். பொருட்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் உதவி உண்டு.

ரிஷபம்: பெரியவர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பீர்கள். தொழில், வியாபாரம் புதிய உத்தியால் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பை பெற்று மகிழ்வீர்கள்.

மிதுனம்: சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு தேடி வரும். உற்சாகமுடன் பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிப்பால் லாபம் உயரும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம்: சிலரது பேச்சால் வருத்தம் ஏற்படலாம். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

சிம்மம்: திட்டமிட்டபடி செயலை நிறைவேற்றுவது நல்லது. அறிமுகமில்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம்.தொழில் வியாபாரத்தில் திடீர் பிரச்னை உருவாகலாம். லாபம் சுமார். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: நீண்டநாள் தாமதமான செயல் கூட நிறைவேறும். உங்களின் தனித்திறமையை அனைவரும் பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் உயரும். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள்.

துலாம்: நண்பர்களால் தொந்தரவுக்கு ஆளாகலாம். தாமதித்த பணிகளை உடனடியாக செய்து முடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இயங்கும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலனுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்: சந்தோஷ முகத் தோற்றம் பெறுவீர்கள். மனதில் இருந்த திட்டம் செயல் வடிவம் பெறும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தனுசு: அவசரப்பணி ஒன்று உருவாகி அல்லல் தரலாம். கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம்.தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும்.சேமிப்புப் பணம் முக்கிய செலவுக்கு பயன்படும்.பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மகரம்: கடந்த கால அனுபவத்தை பேசி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

கும்பம்: பரந்த மனதுடன் நண்பர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் உயரும். சுபவிஷய பேச்சில் முன்னேற்றம் உண்டு. பெண்கள் வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவர். பிள்ளைகளால் பெருமை சேரும்.

மீனம்: அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். தொழில், வியாபாரத்தில் குளறுபடியை சரி செய்வீர்கள். முக்கியச் செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் திடீர் மாறுதல் இருக்கும் .புத்திரரின் செயல் மனதை மகிழ்விக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: