Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 14/07/2018

இன்றைய நாள் எப்படி 14/07/2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 30ம் தேதி, ஷவ்வால் 29ம் தேதி, 14.7.18 சனிக்கிழமை,
வளர்பிறை, பிரதமை திதி காலை 6:52 வரை; துவிதியை திதி இரவு 3:34 வரை, அதன்பின் திரிதியை; பூசம் நட்சத்திரம் இரவு 7:26 மணி வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது : சந்திர தரிசனம், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: பணியில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கடந்த கால உழைப்பின் பயனால் நன்மை அதிகரிக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். உறவினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

ரிஷபம்: குடும்ப பிரச்னையை பிறரிடம் சொல்ல வேண்டாம்.தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்க வேண்டும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஆகும்.

மிதுனம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் திடீர் செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள்.

கடகம்: பேச்சில் உறுதி தன்மை நிறைந்திருக்கும். மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தாராள வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியும் மேலோங்கும்.

சிம்மம்: உங்களிடம் உதவி பெற்றவர் அலட்சியமாக பேசலாம். குடும்பத்தினர் ஆதரவாக நடந்து கொள்வர். தொழில், வியாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும்.வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் உண்டாகும். மனைவியால் நன்மை கிடைக்கும்.

கன்னி: திட்டமிட்டபடி செயல் நிறைவேறும். இஷ்ட தெய்வ அருளால் நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் பன்மடங்கு உயரும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம்: மனதில் இனம் புரியாத கவலை உருவாகலாம். சிரமத்தை சரிசெய்ய நல்லவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பணவரவு பெறுவதில் இருந்த தாமதம் விலகும். இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.

விருச்சிகம்: சிந்தனையில் புதுமை நிறைந்திருக்கும். முன்யோசனையுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். ஆதாயம் திருப்தியளிக்கும். குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.

தனுசு: நண்பருக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மகரம்: எதிலும் அலட்சிய எண்ணம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு வீட்டுச்செலவு அதிகரிக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கும்பம்: யாருக்கும் தகுதி மீறி வாக்குறுதி தராதீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழலால் தொந்தரவுக்கு ஆளாகலாம். லாபம் சுமாராக இருக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.

மீனம்: வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சாதனை இலக்கு பூர்த்தியாகும். குடும்பத் தேவை தாராள செலவில் நிறைவேறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்வர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/09/2018

இன்று! விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 7ம் தேதி, 18.9.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, நவமி திதி ...

%d bloggers like this: