Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/05/2019

இன்றைய நாள் எப்படி 14/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 30ம் தேதி, ரம்ஜான் 7ம் தேதி,
14.5.19 செவ்வாய் கிழமை வளர்பிறை, நவமி திதி பகல் 2:24 வரை;
அதன்பின் தசமி திதி மகம் நட்சத்திரம் காலை 9:39 வரை;
அதன்பின், பூரம், நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : பகல் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அவிட்டம்
பொது : ஆண்டாள் வழிபாடு.

 

மேஷம் : அவசரப்பணி ஒன்று உருவாகலாம். இரக்கக் குணம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். சேமிப்புப் பணம் செலவுக்கு பயன்படும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

ரிஷபம் : செயல்களை பரிசீலித்து நிறைவேற்றுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நிலவும் மாறுபட்ட சூழ்நிலை சங்கடத்தை ஏற்படுத்தும். பணவரவில் தாமதம் இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

மிதுனம் : சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். மனதில் இருந்த திட்டம் செயல் வடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம் : வெளி வட்டாரத் தொடர்பு தொந்தரவு தரலாம். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இயங்கும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

சிம்மம் : குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரம் புதிய யுக்தியால் செழித்து வளரும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

கன்னி : நல்லதை செய்தும் மனவருத்தம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கி இருப்பது நல்லது. கூடுதல் பணிபுரிவதால் தொழில் உற்பத்தி, விற்பனையின் அளவு கூடும். பணவரவு திருகப்திகரமான அளவில் இருக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்ண வேண்டும்.

துலாம் : சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு தேடி வரும். உற்சாகத்துடன் பணிகளை திறமையாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவி புரிவீர்கள்.

விருச்சிகம் : விலகியவர் அன்பு பாராட்டுவர். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் உங்களின் அறிவாற்றல் நிறைந்த செயலால் முன்னேற்றம் பெறும். நிலுவைப் பணம் வசூலாகும். எதிரியால் உருவான தொல்லை விலகும்.

தனுசு : அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். தொழில், வியாபாரத்தில் குளறுபடியை சரி செய்வீர்கள். முக்கியச் செலவுக்கு பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல் இருக்கும். பிள்ளைகளின் செயல் மனதை மகிழ்விக்கும்.

மகரம்: அவப்பெயர் வராத வகையில் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை கூடுதல் முயற்சியால் சீராகும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். பொருட்கள் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும்.

கும்பம் : மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் காணப்படும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.

மீனம் : அனுகூல பலன் தேடி வரும். உங்களின் தனித்திறமையை பலரும் அறிந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை சீராகும். வாகனத்தில் தேவையான மாற்றம் செய்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மனிதனை ஆட்சி செய்யும் நவக்கிரகங்கள்

கிரகம் என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பற்றி இழுப்பது என்று பொருள். ஒன்பது கிரகங்களும் வான்வெளி மண்டலத்தில் தனித்தனியே திகழ்கிறது. இரும்பு ...

%d bloggers like this: