Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/04/2019

இன்றைய நாள் எப்படி 14/04/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 1ம் தேதி, ஷாபான் 8ம் தேதி,
14.4.19, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 6:31 வரை;
அதன்பின் தசமி திதி இரவு 3:42 வரை, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 3:08 வரை;
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த-மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி
* குளிகை : மதியம் 3:00-4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : தமிழ்ப்புத்தாண்டு, சூரியன் வழிபாடு

 

மேஷம்: திட்டம் நிறைவேறும் முன் அதை தெரிவிக்க வேண்டாம் .தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கலாம். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

ரிஷபம்: மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெறும். நண்பரின் உதவி வியப்பைத் தரும்.தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர்.

மிதுனம்: பிடிவாத குணத்தால் அவப்பெயர் ஏற்படலாம். தொழிலில் அனுகூலம் பாதுகாக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பிள்ளைகள் வழியில் செலவு அதிகரிக்கும். வாகனப் பாது காப்பில் கூடுதல் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கடகம்: மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழிலில் இருந்த தாமதம் விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் கூடும். மாமன் மைத்துனர்க்கு உதவுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

சிம்மம்: சிலரது பேச்சு மனதை சங்கடப்படுத்தலாம்.சொந்த பணியில் அக்கறை கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். முக்கிய செலவுக்காக சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: குடும்பத்தில் சுபநிகழ்வு உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவு அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயரும்.நண்பருடன் விருந்து, விழாவில் பங்கேற்பீ்ர்கள். பெண்கள் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர்.

துலாம்: கடந்த கால அனுபவம் வளர்ச்சிக்கு துணைநிற்கும். புதிய வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் அதிகரிக்கும்.ஆதாயம் பெருகும். குடும்பத்தேவை நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

விருச்சிகம்: பொதுப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் மேம்பட நண்பரின் ஆலோசனை உதவும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம்.

தனுசு: உறவினரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை தாமதகதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம்.

மகரம்: நற்செயலில் ஈடுபட்டு பலரின் அன்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

கும்பம்: அடுத்தவர் வியக்கும் விதத்தில் செயல்படுவீர்கள். தொழிலில் உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்கு பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

மீனம்: பேச்சு, செயலில் நிதானம் பின்பற்ற வேண்டும்.தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். ஆரோக்கியம் பலம் பெறும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...