Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/03/2019

இன்றைய நாள் எப்படி 14/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம்; 30ம் தேதி, ரஜப் 6ம் தேதி,
14.3.19 வியாழக்கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி இரவு 11:10 வரை;
அதன்பின் நவமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12:47 வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், மரண யோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : பைரவர், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்: சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

ரிஷபம்: மனதில் நம்பிக்கை குறைவு ஏற்படலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சீரான லாபம் இருக்கும். சேமிப்பு திடீர் செலவால் கரையும். பெண்கள் நகை, பணத்தை கவனமுடன் கையாளவும். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

மிதுனம்: பேச்சு, செயலில் இனிமை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அரசு உதவி பெற அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

கடகம்: யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மிதமான பணவரவு இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை மதிப்பது நல்லது. பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.

சிம்மம்: விடாமுயற்சியால் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர் இயன்ற அளவில் உதவுவார். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அபிவிருத்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு குறித்த பேச்சு நடக்கும்.

கன்னி: நகைச்சுவை உணர்வுடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பாடுபடுவீர்கள். ஆதாயம் உயரும். கடனில் ஒரு பகுதி அடைபடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும்.

துலாம்: மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீரான அளவில் இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுப்பது கூடாது.

விருச்சிகம்: முன்யோசனையுடன் நடப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பிள்ளைகளின் வழியில் செலவு ஏற்படலாம்.கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

தனுசு: எதிரி கூட நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு விலகும். விற்பனை அதிகரிப்பால் வருமானம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். அரசியல்வாதிகளுக்கு விரும்பிய பதவி கிடைக்கும்.

மகரம்: வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். குடும்பத்தினரின் தேவையறிந்து உதவுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் மந்த நிலையில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் திணறுவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மீனம்: சிலரது பரிகாச பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். திட்டம் நிறைவேறும் முன் முடிவு பற்றி சிந்திக்க வேண்டாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். சீரான ஓய்வு உடல்நனை பாதுகாக்கும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று! விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி, 17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 ...

%d bloggers like this: