Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 14/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 29ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 18ம் தேதி,
14.1.20 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:24 வரை,
அதன் பின் பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் காலை 11:18 மணி வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: பகல் 3:00-4:30 மணி
எமகண்டம்: காலை 9:00-10:30 மணி
குளிகை: பகல் 12:00-1:30 மணி
சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்
பொது போகி, விஷ்ணு, துர்கை வழிபாடு.

 

மேஷம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை, நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் தேவை. மாணவர்கள், தேர்ச்சி பெற கூடுதல் பயிற்சி மேற்கொள்ளவும்.

ரிஷபம்: பேச்சும், செயலும் மாறுபடலாம். நண்பரின் வழிகாட்டுதல் நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை தருவீர்கள். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும்.

மிதுனம் : ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவீர்கள். தாமதமாகிய பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். அதிக அளவில் பணவரவு கிடைக்கும். புத்திரரின் நற்செயல், மனதை மகிழ்விக்கும்.

கடகம்: குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் பேசக்கூடாது. சுயலாபத்திற்காக சிலர் உதவ முன்வருவர். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

சிம்மம்: அணுகுமுறை மாற்றம் நல்லபலன் தரும். அயல் வீட்டார் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணவரவு திருப்திகரமாகும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: உறவினரின் பாசம் வியப்பை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது அவசியம். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பயன்தராத பொருளை வாங்க வேண்டாம். போக்குவரத்தில் கவனம் வேண்டும்.

துலாம்: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுதல் பணவரவில், தேவை நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

விருச்சிகம்: இனிய வார்த்தை பேசுவீர்கள். வாழ்க்கை தரம் வியத்தகு அளவில் உயரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

தனுசு: சொந்தப்பணிகளை நிறைவேற்ற ஆர்வம் கொள்வீர்கள். நண்பர், உறவினரை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

மகரம் : அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். வரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கும்பம் : வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். உண்மை, நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான அளவில் வளர்ச்சி பெறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

மீனம் : தொழிலில் அதிக உழைப்பினால் புதிய சாதனைபுரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும்..மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 10/07/2020

இன்று!                              ...