Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 13/09/2018

இன்றைய நாள் எப்படி 13/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 28ம் தேதி, மொகரம் 2ம் தேதி, 13.9.18 வியாழக்கிழமை,
வளர்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:51 வரை; அதன் பின் பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 5:23 வரை; அதன் பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30 – 3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
* குளிகை : காலை 9:00 – 10:30 மணி

* சூலம் : தெற்கு
* பரிகாரம் : தைலம்
* சந்திராஷ்டமம் : ரேவதி
* பொது : விநாயகர் சதுர்த்தி விரதம், விநாயகர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு, கரிநாள்.

மேஷம்: பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நற்பலன் தேடி வரும்.தொழில் வியாபாரம் திருப்திகரமான அளவில் வளர்ச்சி பெறும். ஆதாயம் அதிகரிக்கும். புத்திரரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் இருந்த அதிருப்தி விலகும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு தடையின்றி நிகழும்.

மிதுனம்: எதையும் திட்டமிட்டு செயலாற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

கடகம்: உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். நேரத்திற்கு உண்பதால் உடல்நிலை சீராகும். மாணவர்கள் சாகச விளையாட்டுக்களை தவிர்க்கவும்.

சிம்மம்: இடையூறு செய்பவரை தெரிந்து விலகுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பெண்கள் செலவில் சிக்கனமாக இருக்கவும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை தவறாமல் பின்பற்றவும்.

கன்னி: உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்லலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். மற்றவர் பார்க்கும் விதத்தில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

துலாம்: எதிலும் சுதந்திரமாக செயல்படுவீர்கள். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு உருவாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.

விருச்சிகம்: கூடுதல் பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார். பெண்கள் பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும். இஷ்ட தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

தனுசு: நண்பரின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மகரம்: செயல்களில் உற்சாகமும், சமயோசிதமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, அணிகலன் வாங்க நல்யோகம் உண்டு.

கும்பம்: சுயலாபத்திற்காக சிலர் உங்களை புகழ்வர். போட்டி, பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுப்பது ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

மீனம்: பேச்சில் அன்பும் பண்பும் நிறைந்திருக்கும். தொழில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறை வேறும். வருமானம் பன்மடங்கு உயரும். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி, 19.7.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...

%d bloggers like this: