Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 13/08/2018

இன்றைய நாள் எப்படி 13/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 28ம் தேதி, துல்ஹஜ் 1ம் தேதி,
13.8.18 திங்கட்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி காலை 11:57 வரை;
அதன் பின் திரிதியை திதி, பூரம் நட்சத்திரம் இரவு 11:21 வரை;
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
பொது : ஆடிப்பூரம், ஆண்டாள் வழிபாடு.

மேஷம்: மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபார இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக அமையும்.

ரிஷபம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படும் .சிறிதளவு கடன் பெற நேரிடலாம். பணியாளர்கள் கடின பணிகளில் பாதுகாப்பு பின்பற்றுவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை.

மிதுனம்: எதிரியினால் உருவான இடையூறுகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிப்பால் லாபம் உயரும். நிலுவைப் பணமும் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கடகம்: நண்பரிடம் குடும்ப விஷயம் பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை கவனமுடன் பாதுகாப்பது நல்லது.பணப்பரிவர்த்தனை சுமூகமாக இருக்கும். பயன்தராத பொருள் நிர்பந்தத்தின் பேரில் வாங்க வேண்டாம்.

சிம்மம்: சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். பேச்சு, செயல்களில் உற்சாகம் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி எளிதாக நிறைவேறும். பிள்ளைகளின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் நற்செயலால் புகழ் பெறுவர்.

கன்னி: அவசரப்பணியால் பரபரப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணவரவு சராசரி அளவில் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம்.

துலாம்: திட்டமிட்ட பணி நிறைவேறி நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் சலுகை விலையில் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: அனுபவ அறிவால் வாழ்வில் வெல்வீர்கள். மனதில் சாந்த குணம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உண்டாகும். வருமானம் திருப்தி தரும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

தனுசு: அறிமுகம் இல்லாத எவரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் மந்த கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி உண்டு.

மகரம்: திட்டமிட்ட பணிகள் நிறைவேற தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

கும்பம்: உறவினர்களின் அன்பான பேச்சு ஊக்கமளிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். நிலுவைப் பணமும் வசூலாகும். பெண்கள் தாய்வீட்டாரின் உதவியை கேட்டுப் பெறுவர்.

மீனம்: இனிய அனுபவத்தால் மனம் உற்சாகம் எழும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 3ம் தேதி, ஷாபான் 10ம் தேதி, 16.4.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: