Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/07/2019

இன்றைய நாள் எப்படி 13/07/2019

மேஷம்: செயல்கள் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம். தகுதி மீறி யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு கடன் வாங்க நேரிடலாம். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

ரிஷபம்: நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில் வியாபாரம் செழித்து லாபம் உயரும். வாழ்க்கைத்தரம் மேம்படும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மிதுனம்: குடும்பத்தினரின் ஆதரவால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் பணவரவு கிடைக்கும். நிலுவை கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். பெண்களுக்கு விருந்து விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம்: சிலர் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தயங்குவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். பணவரவை விட வீட்டுச் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தின் போது கவனமாக இருக்கவும்.

சிம்மம்: வழக்கத்திற்கு மாறான பணியில் ஈடுபட நேரிடும். தொழில், வியாபாரத்தில் நடைமுறை சீராக நண்பரின் உதவி கிடைக்கும். வருமானம் சுமாராக இருக்கும். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். நிர்பந்தத்தின் பேரில் பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

கன்னி: உங்கள் உழைப்பின் ஆர்வத்தை நண்பர்கள் பாராட்டுவர். தொழில், வியாபார நடைமுறையில் அனுகூலம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆபரண சேர்க்கை பெற நல்யோகம் உண்டு. அரசு வகையில் உதவி வரும்.

துலாம்: அத்தியாவசிய பணிகளை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம்: விலகிச் சென்ற நண்பர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். சராசரியை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை தாராள செலவில் நிறைவேறும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

தனுசு: உங்களின் எதார்த்த பேச்சு சிலரை சங்கடப்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் இலக்கை நிறைவேற்ற தாமதம் உண்டாகும். சுமாரான பணவரவு கிடைக்கும்.நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமிதம் அளிக்கும்.

மகரம்: இஷ்ட தெய்வ அருளால் நன்மை காண்பீர்கள். அவமதித்து பேசியவரும் குறை உணர்ந்து அன்பு பாராட்டுவார்.தொழிலில் உருவான மந்தநிலை மறையும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்: விலகிய உறவினரும் நெருங்கி வருவர். பகைவரிடமும் பெருந்தன்மையுடன் நடப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நிலுவைப் பணம் வசூலாகும். எதிரியால் உருவான தொல்லை விலகும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மீனம் : சமூக நிகழ்வுகள் அதிருப்தியளிக்கும். சுயகவுரவம் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பால் வருமானம் சீராகும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: