Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/05/2019

இன்றைய நாள் எப்படி 13/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 29ம் தேதி, ரம்ஜான் 6ம் தேதி,
13.5.19 திங்கள் கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 4:49 வரை;
அதன்பின், நவமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 11:15 வரை;
அதன்பின், மகம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : சூரியன் வழிபாடு

 

 

மேஷம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக நண்பரின் உதவி உண்டு. பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். நிர்பந்தத்தின் பேரில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். தாயின் ஆறுதல் வார்த்தை மனதில் நம்பிக்கை தரும்.

ரிஷபம் : சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தயங்குவர். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சிபெற புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும்.

மிதுனம் : சிறிய முயற்சியும் அதிக நன்மை தரும். விலகிச் சென்ற நண்பர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான பணி புரிவீர்கள். சராசரியைவிட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.

கடகம் : செயல்கள் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம். தகுதிக்கு மீறிய வாக்குறுதியை யாருக்கும் தர வேண்டாம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணக்கடன் பெற நேரிடலாம். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

சிம்மம் : குடும்ப உறுப்பினர்கள் தேவையான உதவி வழங்குவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.

கன்னி : சமூக நிகழ்வுகள் அதிருப்தி தரும். சுயகவுரவம் பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

துலாம் : மிகுந்த புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். பணிகள் இலகுவாக நிறைவேறும். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். நண்பரிடம் கொடுத்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சந்தோஷம் வளரும்.

விருச்சிகம் : சவால்களை ஏற்று செயல்பட எண்ணம் வளரும். தடைகளை தகர்த்தெறியும் விதமாக பணிபுரிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

தனுசு : உங்களின் எதார்த்த பேச்சு சிலர் மனதை சஞ்சலப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் இலக்கை நிறைவேற்ற தாமதமாகும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம்பெறும்.

மகரம் : அத்தியாவசிய பணிகளை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. எதிர்பார்த்த நன்மை ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம் : செயல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பரின் பாராட்டை பெறுவீர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

மீனம் : உங்கள் உழைப்பின் ஆர்வத்தை நண்பர் பாராட்டுவர். தொழில், வியாபார நடைமுறையில் அனுகூலம் ஒருசேர கிடைக்கும். ஆதாய பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெண்கள் புத்தாடை நகை வாங்குவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 13ம் தேதி, 19.5.19 ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை, பிரதமை திதி ...

%d bloggers like this: