Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/04/2019

இன்றைய நாள் எப்படி 13/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 30ம் தேதி, ஷாபான் 7ம் தேதி,
13.4.19, சனிக்கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி காலை 8:40 வரை;
அதன் பின் நவமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 6:12 வரை;
அதன்பின் பூசம் நட்சத்திரம் அதிகாலை 4:38 வரை ,சித்த-மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : ஸ்ரீராமநவமி, ராமர், ஷீரடி பாபா பிறந்த நாள், சனீஸ்வரர் வழிபாடு.

 

 

மேஷம்: வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணவரவுக்கேற்ப செலவை குறைத்துக் கொள்ளவும். வெளியூர் பயணம் செல்லும் நிர்பந்தம் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

ரிஷபம்: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறிய தீவிரமாக பணிபுரிவீர்கள்.தொழில், வியாபார வளர்ச்சியால் சாதனை உருவாகும். பணவரவு திருப்தியளிக்கும். ஆரோக்கியம் பலம் பெறும்.

மிதுனம்: திறமையை வளர்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கடகம்: சிறு செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற்று மனநிறைவைத் தரும். கூடுதல் பணவரவால் சேமிப்பு உயரும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் நகை, புத்தாடை வாங்க அனுகூலம் உண்டு.

சிம்மம்: உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாப்ம சீராக இருக்கும். பெண்கள் ஆடம்பர செலவைத் தவிர்க்கவும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

கன்னி: மனதில் புத்துணர்ச்சி மேலோங்கும். தொழில் வளம் சிறந்து வாழ்க்கைத்தரம் உயரும். உபரி பணவருமானம் சேமிப்பாகும். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும்.

துலாம்: பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். அளப்பரிய வகையில் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். வருமானம் உயரும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்: உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது. கூடுதல் உழைப்பால் தொழிலில் வருமானத்தை பெருக்குவீர்கள். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். முக்கிய செலவுக்காக சேமிப்பு பணம் கரையும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது.

தனுசு: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். முக்கிய செலவுக்காக கடன் பெற நேரிடலாம். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

மகரம்: நற்செயலில் ஈடுபட்டு பலரின் அன்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

கும்பம்: அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். சமயோசித செயலால் தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். புத்திரர் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்: எதிர்ப்பாக பேசுபவரிடம் இருந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும்.சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பெற்றோர்க்கு பெருமை தேடித் தருவர்.

 

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: