Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/03/2019

இன்றைய நாள் எப்படி 13/03/2019

இன்று!

விளம்பி வருடம், மாசி மாதம்; 29ம் தேதி, ரஜப் 5ம் தேதி,
13.3.19 புதன்கிழமை வளர்பிறை, சப்தமி திதி இரவு 12:38 வரை;
அதன்பின் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 1:34 வரை;
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : முகூர்த்த நாள், அம்பிகை, விஷ்ணு வழிபாடு.

 

மேஷம் : யாரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். உடல்நலனில் தகுந்த கவனம் கொள்வது நல்லது.தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். அதிக அளவில் பணம் செலவழிப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

ரிஷபம் : ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். வியத்தகு அளவில் நன்மை கிடைக்கும். தொழில் வளம் சிறந்து வாழ்க்கைத்தரம் உயரும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. கூடுதல் சொத்து சேர அனுகூலம் உண்டாகும்.

மிதுனம் : பகைவரிடம் இருந்து விலகுவது நல்லது. முக்கிய பணி நிறைவேற மாற்று உபாயம் தேடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம்: தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தாமதமான செயல்கள் கூட எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். அதிக பணவரவால் சந்தோஷம் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.

சிம்மம்: வெகுநாள் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.தாராள அளவில் பணவரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி: செயல் நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும்.தொழிலில் உள்ள அனுகூலத்தை தவறாமல் பாதுகாப்பது நல்லது. செலவில் சிக்கனம் பின்பற்றுவது சிரமத்தை தவிர்க்கும். பெண்களுக்கு ஆன்மிக எண்ணம் மேம்படும். புத்திரரின் நற்செயல் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும்.

துலாம்: நண்பரின் செயலை குறைசொல்ல வேண்டாம்.அதிக உழைப்பால் தொழில் வியாபார நடைமுறையை சீர்படுத்துவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்பது நல்லது. பெற்றோரின் தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

விருச்சிகம் : நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். அதிக உழைப்பால் தொழில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தினரின் தேவையறிந்து தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். உடல்நலமும், மனவளமும் உண்டாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

தனுசு : திகைப்பு தந்த பணி எளிதில் நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க அனுகூலமான சூழ்நிலை அமையும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்: சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் செலவு ஏற்படலாம். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

கும்பம்: முக்கிய செயல் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபபத்தில் உள்ள அனுகூலங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம்.சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவால் கரையும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

மீனம்: மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: