Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 12/09/2018

இன்றைய நாள் எப்படி 12/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 27ம் தேதி, மொகரம் 1ம் தேதி,
12.9.18 புதன்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 7:35 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 5:16 வரை;
அதன் பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : முகூர்த்த நாள், பெருமாள் வழிபாடு.

 

மேஷம்: இனிய எண்ணத்தால் மனதில் உற்சாகம் மேலோங்கும். புதிய முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். ஆதாயம் கூடும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

ரிஷபம்: குடும்ப விஷயம் குறித்து மற்றவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

மிதுனம்: புதியவர்களிடம் பழகுவதில் நிதானம் வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். சுமாரான பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்: உங்கள் நலம் விரும்புவரை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

சிம்மம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி: நேர்மை எண்ணம் மேலோங்கும். வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். சேமிப்பு கூடும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும். சுபசெய்தி வந்து சேரும்.

துலாம்: எவரிடமும் அளவுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். தாயின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை காண்பீர்கள்.

விருச்சிகம்: பொதுநலப் பணியில் ஈடுபாடு கொள்வீர்கள். .தொழில் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கூடும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளால் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும்.

தனுசு: உற்சாக மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். கூடுதல் வருமானத்தால் தாராளமாக செலவு செய்வீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

மகரம்: உறவினரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சுமாரான அளவில் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகலாம். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்றவும்.

கும்பம்: பேச்சு, செயல்களில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமை அவசியம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையளிக்கும்.

மீனம்: திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆதாயம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி கிடைக்கும்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/09/2018

இன்று! விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 7ம் தேதி, 18.9.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, நவமி திதி ...

%d bloggers like this: