Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/07/2019

இன்றைய நாள் எப்படி 12/07/2019

மேஷம்: புதியவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். வருமானத்தில் கொஞ்சம் சேமிப்பீர்கள். குடும்ப விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்: சவால்களை ஏற்று வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால் சாதனை புரிவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

மிதுனம்: வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கிற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தவும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றவும். நேரத்திற்கு உண்பதால் உடல்நலம் சீராகும்.

கடகம்: மனதில் சஞ்சலம் ஏற்பட்டு மறையும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

சிம்மம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கன்னி: உங்களின் நற்குணத்தை சிலர் விமர்சிப்பர். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். விருந்து விழாவில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள்.

துலாம்: குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சரிசெய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். நண்பர்களுடன் இனிய நினைவுகளில் மனம் மகிழ்வீர்கள்.

விருச்சிகம் : பேசும் வார்த்தை குளறுபடியாகலாம். செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் குறுக்கிடும் தடைகளை சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். உறவினரால் உதவி உண்டு.

தனுசு: புத்திசாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். நண்பரிடம் முன்னர் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

மகரம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

கும்பம்: எதிர்பார்த்த நன்மை தெய்வ அனுகூலத்தால் நிறைவேறும். தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெறும். ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். நண்பரால் உதவி உண்டு.

மீனம்: நண்பர்களால் பிரச்னை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் குடும்பநலனில் கவனம் செலுத்துவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: