Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/05/2019

இன்றைய நாள் எப்படி 12/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 28ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி,
12.5.19 ஞாயிற்றுக் கிழமை  வளர்பிறை, சப்தமி திதி இரவு 7:13 வரை;
அதன்பின் அஷ்டமி திதி, பூசம் நட்சத்திரம் பகல் 12:51 வரை;
அதன்பின், ஆயில்யம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
எமகண்டம் : பகல் 1:30 – 3:00 மணி
குளிகை : காலை 6:00 – 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம் : உங்கள் கருத்துக்களை மற்றவர் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில், வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

ரிஷபம் : சில விஷயங்களில் அதிருப்தி இருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவதால் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். .பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை சீராக இருக்கும்.

மிதுனம் : சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு, லாபம் அதிகரிக்கும். நீண்ட கால பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

கடகம் : உங்களின் நல்ல குணங்களை சிலர் விமர்சித்து பேசுவர். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை ஓரளவு சீராகும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.

சிம்மம் : புதியவரை நண்பராக ஏற்பதில், அதிக கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் வருகிற குறுக்கீடுகளை சரி செய்வதால், வளர்ச்சி சீராகும். முக்கிய செலவுக்கு சிறு அளவில் பணக்கடன் பெறுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

கன்னி : மனதில் சிறு சஞ்சலம் வந்து விலகும். குடும்பத்தில் எவருடனும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

துலாம் : மிகுந்த புத்தி சாதுர்யத்துடன் செயல்படுவீர்கள். பணிகள் இலகுவாக நிறைவேறும். தொழில், வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை அடையும். நண்பரிடம் கொடுத்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சந்தோஷம் வளரும்.

விருச்சிகம் : உங்கள் எண்ணம், செயலில் சில மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நேரம் தவறாமையை அவசியம் பின்பற்ற வேண்டும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

தனுசு : கூடுதல் பணி உருவாகி தொந்தரவு தரலாம். சுய லாபத்துடன் சிலர் பழகுவர். தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி சீராகும்.

மகரம் : உங்கள் நலன் விரும்புபவரை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில், வியாபாரம் சிறக்க அதிக பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம் : புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மீனம் : உங்கள் பேச்சில் வசீகரத் தன்மை இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள் .ஆதாய பணவரவு உண்டு. இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: