Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/04/2019

இன்றைய நாள் எப்படி 12/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 29ம் தேதி, ஷாபான் 6ம் தேதி,
12.4.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி காலை 10:49 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 7:32 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30-9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு,முகூர்த்தநாள்.

மேஷம்: சாந்த குணத்துடன் பழகுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவில் திருப்திகரமான நிலை இருக்கும். பெண்கள் முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். நண்பரால் உதவி உண்டு.

ரிஷபம்: உங்களை சிலர் ஏளனமாக பேசலாம். பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிடும். லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

மிதுனம்: சிந்தனையில் புத்துணர்வு பிறக்கும். திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். தாராள லாபம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

கடகம்: சிலரது அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்ள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றவும். வெளியூர் பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.

சிம்மம்: மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி: இஷ்ட தெய்வ அருளால் நன்மை காண்பீர்கள். குடும்ப பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி வருமானம் சேமிப்பாகும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். உறவினரால் உதவி உண்டு.

விருச்சிகம்: உறவினரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.

தனுசு: முக்கிய பணி நிறைவேறுவதில் கவனம் செலுத்துவீர்கள். முயற்சிக்குரிய பலன் முழுமையாக வந்து சேரும்.தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். ஆதாயம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு.

மகரம்: மனதில் புதிய சிந்தனை பிறக்கும். எதிலும் சமயோசிதமாக செயல்படுவீ்ர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். உறவினர் வகையில் உதவி உண்டு.

கும்பம்: நண்பர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சுமார். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்குவர். வெளியூர் பயணம், பயனறிந்து மேற்கொள்ளவும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்: வழக்கத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை ஓரளவு சமாளிப்பர். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வீர்கள். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: