Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/03/2019

இன்றைய நாள் எப்படி 12/03/2019

இன்று!

விளம்பி வருடம், மாசி மாதம் 28ம்; தேதி, ரஜப் 4ம் தேதி,
12.3.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, சஷ்டி திதி இரவு 1:46 வரை;
அதன்பின் சப்தமி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 2:03 வரை;
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
பொது : சஷ்டி, கார்த்திகை விரதம், முருகன், துர்கை வழிபாடு.

மேஷம் : மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

ரிஷபம் : மனதில் வெகுநாள் இருந்த குழப்பம் சரியாகும். வாழ்வில் முன்னேற்றம் பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகளின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

மிதுனம் : சுயமான செயல் மட்டுமே ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும்.

கடகம் : உண்மை மற்றும் உழைப்பின் மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

சிம்மம் : நண்பரின் ஆதரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். பலரும் வியக்கும் வகையில் தொழிலில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் மகிழ்ச்சி தரும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

கன்னி : முக்கியமான பணியை பிறரிடம் ஒப்படைக்க கூடாது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு ஆரோக்கியம் தரும்.

துலாம் : அக்கம் பக்கத்தவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம் : இனிய எண்ணங்களுடன் பணிகளை துவங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் பலகாலம் இருந்த இடையூறு விலகும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு : மனதில் இறையருள் மீதான நம்பிக்கை வளரும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறந்து புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

மகரம் : திட்டமிட்ட செயலை மறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக செயல்படுவர். சக தொழில் சார்ந்தவரிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம் : நண்பரின் ஆலோசனை மனதில் புதிய நம்பிக்கையைத் தரும். தொழில் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். மனைவி வழிசார்ந்த உறவினரால் நன்மை உண்டு.

மீனம் : செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவரவில் நிலுவை கடன் செலுத்துவீர்கள். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/03/2019

இன்று! விளம்பி வருடம், பங்குனி மாதம் 3ம் தேதி,ரஜப் 9ம் தேதி, 17.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை,ஏகாதசி திதி மாலை 5:02 ...

%d bloggers like this: