Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 12/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 27ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 16ம் தேதி,
12.1.20 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 10:36 வரை,
அதன் பின் திரிதியை திதி, பூசம் நட்சத்திரம் பகல் 1:58 மணி வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: மாலை 4:30-6:00 மணி
எமகண்டம்: பகல் 12:00-1:30 மணி
குளிகை: பகல் 3:00-4:30 மணி
சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்
பொது சூரியன் வழிபாடு.

 

மேஷம்: மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். பொருட்களை இரவலாக கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

ரிஷபம்: புதிய முயற்சியால் தாமதமான செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் நம்பிக்கை வளரும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். கூடுதல் பொருள் சேர்க்கை பெறுவீர்கள். மனைவியின் அன்பினால் மகிழ்வீர்கள்.

மிதுனம்: மனதில் சங்கடம் ஏற்படலாம். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை தாமதமின்றி சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். பயன் தராத பொருளை விலைக்கு வாங்கக்கூடாது.

கடகம்: செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு தேவையானது நிறைவேறும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். குடும்பத்தினரிடம் வாக்குவாதம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும்.

கன்னி: செயல்களில் நிதானம் கடைப்பிடிப்பீர்கள். எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி வருமானம் பெறுவீர்கள். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.

துலாம்: பேச்சில் அன்பு மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் புத்தாடை வாங்குவர்.

விருச்சிகம்: சிலரது அதிருப்தியை பெறலாம். தொழில், வியாபாரம் வளா்ச்சி காண மாற்றம் தேவை. செலவு அதிகரிக்கும். உணவினை தரமறிந்து உண்ணவும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை தவறாமல் பின்பற்றவும்.

தனுசு: நற்செயலை சிலர் கேலி செய்வர். சகிப்புத் தன்மை நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். போக்குவரத்தில் கவன நடை நல்லது.

மகரம்: கலை உணர்வு அதிகரிக்கும். கலைப்பை உருவாக்கிய வேலை, ஆதாயம் தரும். தொழில், வியாபாரத்தின் வளர்ச்சியை பார்த்து வியப்படைவர். உபரி வருமானம் கிடைக்கும். எளியவர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம்: செயலில் அறிவுத் திறமை கூடும். கடினமான பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

மீனம்: வெளி வட்டார தொடர்பு, தொந்தரவு தரலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தியை பயன்படுத்துவீர்கள். மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணத்தில், மாற்றம் செய்வீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 02/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...