Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/01/2019

இன்றைய நாள் எப்படி 12/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 28ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 5ம் தேதி,
12.1.19 சனிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மாலை 6:56 வரை;
அதன்பின் சப்தமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : உத்திரம்
பொது : சஷ்டி விரதம், முருகன், சனீஸ்வரர் வழிபாடு, விவேகானந்தர் பிறந்தநாள்.

மேஷம் : மனதில் சிறு சஞ்சலம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
ரிஷபம் : சான்றோர்களின் ஆசி கிடைக்கும். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். புதிய அணுகுமுறையால் தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறை சரி செய்வீர்கள். ஆதாய வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

மிதுனம் : நண்பரிடம் சொந்த விஷயம் பேசுவீர்கள். தேவையான உதவி கிடைக்கும். உற்சாகமுடன் செயல்பட்டு தொழிலில் குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி வருமானம் வந்து சேரும். முக்கியமான செயல் எளிதாக நிறைவேறும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் வளரும்.

கடகம் : எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை உதவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம் செய்வதால் மனதில் புத்துணர்வு ஏற்படும். பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக்கூடாது.

சிம்மம் : மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். செலவில் சிக்கனம் வேண்டும். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கன்னி : நட்பின் பெருமையை எண்ணி மகிழ்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

துலாம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தாமதம் விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம் : சிறுசெயல் கூட கடினமாக தோன்றலாம். பொது விவகாரத்தில் நிதானித்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

தனுசு : வழக்கத்திற்கான மாறான பணி தொந்தரவு தரலாம். குடும்ப உறுப்பினர் தேவையான உதவி வழங்குவர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் நகை பாதுகாப்பில் அதிக கவனம் வேண்டும்

மகரம் : எதிர்பார்த்த காரியம் வெற்றி செய்தி தரும். நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். சேமிப்பை கொஞ்சம் அதிகரிப்பீர்கள்.

கும்பம் : அதிக பொறுப்புணர்வுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபார நடைமுறை ஓரளவு சீராகும். முக்கிய தேவைகளுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் பாதுகாக்கலாம்.

மீனம் : கடந்த கால உழைப்புக்கு நற்பலன் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வாழ்வில் கூடுதல் நம்பிக்கை ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இயலாதவர்களுக்கு தானம், தர்மம் செய்வீர்கள்.

 

About அகமுகிலன்

x

Check Also

எந்த ராசிக்காரர்கள் எந்த நோயால் அவஸ்தைப்படுவார்கள்

மேஷ ராசி : தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே ...

%d bloggers like this: