Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/12/2019

இன்றைய நாள் எப்படி 11/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ரபியுல் ஆகிர் 13ம் தேதி,
11.12.19 புதன்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 11:39 வரை,
அதன் பின் பவுர்ணமி திதி, கார்த்திகை நட்சத்திரம் காலை 6:55 வரை,
அதன் பின் ரோகிணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : பகல் 12:00 – 1:30 மணி
எமகண்டம் : காலை 7:30 – 9:00 மணி
குளிகை : காலை 10:30 – 12:00 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : விசாகம்
பொது : பவுர்ணமி விரதம், கிரிவலம், மலைக்கோவில் வழிபாடு, முகூர்த்த நாள்

 

மேஷம் : திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பண வரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்து மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.

ரிஷபம் : உங்களின் கருத்து நிறைந்த பேச்சை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை சரியாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும்.

மிதுனம் : பொது விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். அளவான பண வரவு கிடைக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். தெய்வ வழிபாடு சில நன்மை தரும்.

கடகம் : உலக நடப்பை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபார தொடர்பு வியத்தகு அளவில் பலம் பெறும். தாராள பண வரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
சிம்மம் : வெகு நாள் தவம் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து வளர அனுகூல காரணி பலம் பெறும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர்.
கன்னி : செயல்களில் நிதானம் உரிய பலன் பெற்று தரும். தொழில், வியாபாரம் செழிக்க நண்பர் உதவுவார். அளவான பண வரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.
துலாம் : உங்கள் பேச்சில் விரக்தியின் தன்மை வெளிப்படலாம். கவுரவத்தை பாதுகாப்பது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். பண வரவு குறைந்த அளவில் கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.
விருச்சிகம் : எதிர் கால வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திட்டமிட்டபடி நிறைவேறும். கூடுதல் பண வரவில் அற பணி செய்வீர்கள். புத்திரர் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
தனுசு : நண்பர், உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிப்படையும். தாராள பண வரவு கிடைக்கும். குடும்ப தேவையை தாராளமாக பூர்த்தி செய்வீர்கள். எதிர் பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
மகரம் : உறவினர்களிடம் பேச நினைத்த விஷயம் மாறி போகலாம். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறு சரி செய்வதில் தாமதம் இருக்கும். குறைந்த அளவில் பண வரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருள் கவனமுடன் பாதுகாக்கவும்.
கும்பம் : மனதில் உறுதி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குளறுபடி சரியாகும். குடும்ப தேவைகளுக்கான பண செலவு அதிகரிக்கும். அறிமுகம் இல்லாதவர் தருகின்ற உணவு உண்ணக்கூடாது.
மீனம் : பணியில் நேர்த்தியும், கலை ரசனையும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவை பணமும் வரவாகும். கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 30/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி, 30.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...