Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/11/2018

இன்றைய நாள் எப்படி 11/11/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 25ம் தேதி, ரபியுல் அவ்வல் 2ம் தேதி,
11.11.18 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 12:44 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 1:28 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த-சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம். விநாயகர், சூரியன் வழிபாடு.

மேஷம்: நண்பரின் செயலில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். ஆரோக்கியம் பேணுவதால் பணிகளில் ஆர்வம் வளரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: முக்கிய செயல் ஒன்றை நிறைவேற்ற மறப்பீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்: லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

கடகம்: செயல்களில் தியாகம் நிறைந்திருக்கும். புதியவர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார நடைமுறையில் இருந்த குறுக்கீடு விலகும். ஆதாயம் சீராக இருக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும்.

சிம்மம்: சிலர் உங்களுக்கு வாக்குறுதிக்கு மாறாக செயல்படுவர். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்கள் உடல்நலனுக்காக சிகிச்சை மேற்கொள்வர்.

கன்னி: உங்களின் சுயதேவைகளை பூர்த்தி செய்ய முயல்வீர்கள். உறவினரின் செயல் குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம்.தொழில் வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.

துலாம்: உங்களை விமர்சித்து பேசியவர் கூட பாராட்டுவர். தொழில் வியாபார வளர்ச்சியால் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

விருச்சிகம்: யாரிடமும் வாக்குவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம்.சராசரி அளவில் இருக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை சரிவர பின்பற்றவும்.

தனுசு: நீண்டநாள் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். நற்செயலில் ஈடுபட்டு புகழுடன் திகழ்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாயம் உயரும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

மகரம்: முன்யோசனையுடன் செயல்பட்டு வருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி வரும். பெண்களுக்கு புதிய வகையில் செலவு ஏற்படலாம். உறவினரைச் சந்திக்கின்ற வாய்ப்பு உருவாகும்.

கும்பம்: உங்களின் சாமர்த்தியத்தை பலரும் பாராட்டுவார். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளரும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை பெருமளவில் பூர்த்தியாகும். மனைவியின் அன்பைக் கண்டு மனம் மகிழ்வீர்கள்.

மீனம்: எதிரியால் ஏற்பட்ட தொந்தரவு விலகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 19/07/2019

இன்று! விகாரி வருடம், ஆடி மாதம் 3ம் தேதி, துல்ஹாதா 15ம் தேதி, 19.7.19 வெள்ளிக்கிழமை தேய்பிறை, துவிதியை திதி ...

%d bloggers like this: