Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/10/2019

இன்றைய நாள் எப்படி 11/10/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 24ம் தேதி, ஸபர் 11ம் தேதி,
11.10.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 11:24 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரம்
பொது : பிரதோஷம். நந்தீஸ்வரர், சிவன் வழிபாடு.

 

மேஷம் : புதியவர்களின் உதவி கிடைத்து மனதில் ஊக்கம் வளரும். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

ரிஷபம் : இனிய வார்த்தை பேசி நற்பெயர் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். புத்திரரின் நற்செயல் பெருமை தேடி தரும்.

மிதுனம் : உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். முக்கியமான செலவுகளுக்கு பண கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.

கடகம்: சுற்றுப்புற சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி, விற்பனை சீராகும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

சிம்மம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி பணவரவு உண்டு. கலையம்சம் நிறைந்த வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

கன்னி : புதிய விஷயங்களில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற சில மாற்றம் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

துலாம்: சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் கொள்வீர்கள். தொழிலில் வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். புத்திரரின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.

விருச்சிகம்: பணிகளில் முன் யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். பண செலவு அதிகரிக்கும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவால் நித்திரை தாமதமாகலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வது நல்லது.

தனுசு: அன்பு வழியை அதிகம் பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். நீண்ட கால பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.

மகரம் : எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தொழிலில் இடையூறுகளை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

கும்பம் : மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அறப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் பாராட்டு, வெகுமதி பெறுவர்.

மீனம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். மனதை செம்மைப்படுத்தி கொள்வது அவசியம். தொழில், வியாபாரம் நண்பரின் உதவியால் வளர்ச்சி பெறும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: