Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/10/2018

இன்றைய நாள் எப்படி 11/10/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 25ம் தேதி, ஸபர் 1ம் தேதி,
11.10.18 வியாழக்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி காலை 7:58 வரை;
அதன் பின் திரிதியை திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 1:04 வரை;
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : நவராத்திரி 2ம் நாள், அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வழிபடுதல், தட்சிணாமூர்த்தி, லட்சுமி நரசிம்மர் வழிபாடு.

மேஷம்: பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க வாய்ப்புண்டு. வருமானம் அதிகமாக கிடைக்கும்.விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள்.குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வர திட்டம் உருவாகும்.

ரிஷபம்: வாழ்வில் குறுக்கிடும் சிரமங்களை வெல்லும் திறன் பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்குரிய நண்பர், உறவினர்கள் பரிசுப்பொருள் வழங்குவர். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

மிதுனம்: சமூக நிகழ்வுகளால் மனம் பாதிக்கலாம். தொழில், வியாபாரத்தில் குளறுபடியை தாமதமின்றி சரி செய்யவும். மிதமான பணவரவு கிடைக்கும். தியானம், இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. இயந்திரப்பிரிவு பணியாளர்கள் விழிப்பாக பணியாற்றவும்.

கடகம்: விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை தேவை. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். குடும்பத்தின் முக்கியதேவை ஓரளவு நிறைவேறும்.

சிம்மம்: மனம், செயலில் புத்துணர்வு மேம்படும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும். ஆதாயம் உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

கன்னி: சுயநலநோக்குடன் சிலர் உங்களை புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். வருமானம் சுமார். புதிய இனங்களில் திடீர் செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். நண்பரால் உதவி உண்டு.

துலாம்: உறவினர் பாசபந்தமுடன் பழகுவர். தொழில் வியாபாரம் செழிக்கத் தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தேவை தாராள செலவில் நிறைவேறும்.

விருச்சிகம்: நீங்கள் நண்பருக்காக பரிந்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க நேரிடும். பணவரவு சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். சுற்றுப்புற சூழலின் தொந்தரவால் நித்திரை தாமதமாகலாம்.

தனுசு: குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். மாமன், மைத்துனருக்கு உதவி புரிவீர்கள் .மாணவர்கள், பொறுப்புணர்வுடன் படித்து பாராட்டு பெறுவர்.

மகரம்: உங்கள் செயல் திறன் கண்டு பலரும் பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும்.

கும்பம்: திடீர் பணியால் அவசரகதிக்கு ஆளாகலாம். நல்லவர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில்,வியாபாரத்தில் இலக்கு கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.

மீனம்: சிலர் உங்களுக்கு உதவுவது போல ஏமாற்றலாம். விடாமுயற்சியால் திட்டமிட்டபணி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றவும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

 

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 14/06/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 31ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி, 14.6.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: