Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/07/2019

இன்றைய நாள் எப்படி 11/07/2019

மேஷம்: பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை, அணிகலன் வாங்குவர். நண்பர்க்கு தேவையறிந்து உதவுவீர்கள்.

ரிஷபம்: அடுத்தவர் பிரச்னையில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உருவாகிற இடையூறுகளை உடனடியாக சரிசெய்யவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மிதுனம்: இயற்கை அழகை ரசித்து மகிழ்வீர்கள். வாழ்வை மேம்படுத்த அக்கறையுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்: ஆன்மிக சிந்தனையுடன் பணிபுரிவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் நன்மை வந்து சேரும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அதிக பணவரவால் சொத்து வாங்குவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

சிம்மம்: சிலரது பேச்சு மனதிற்கு கஷ்டம் தரலாம். நற்பெயரை பாதுகாத்துக் கொள்ளவும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

கன்னி: பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஆகலாம். உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் தாராளம் பின்பற்றுவர். ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்: லட்சியம் நிறைவேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரியாக பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

விருச்சிகம்: மனதில் உதித்த திட்டம் செயல் வடிவம் பெறும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். லாபம் பன்மடங்கு உயரும். பெற்றோரின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு: அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேசக் கூடாது. எதிலும் முன் யோசனை அவசியம்.தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும்.அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெற வேண்டாம். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.

மகரம்: நண்பரிடம் மனம் விட்டுப் பழகுவீர்கள்.தொழில் வியாபாரம் திட்டமிட்ட இலக்கை அடைய அவகாசம் தேவைப்படும்.சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

கும்பம்: சவால்களை ஏற்று செயல்படுகிற எண்ணம் வளரும்.தொழில் வியாபாரத்தில் நிலுவைப்பணி கூடுதல் உழைப்பால் நிறைவேறும். பணவரவால் சேமிக்க வாய்ப்புண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். சுகமான நித்திரை அனுபவம் உண்டாகும்.

மீனம்: மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் விலகுவது நல்லது.தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். லாபம் சுமார். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

 அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: