Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/07/2018

இன்றைய நாள் எப்படி 11/07/2018

இன்று!

விளம்பி வருடம், ஆனி மாதம் 27ம் தேதி, ஷவ்வால் 26ம் தேதி,
11.7.18 புதன்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மதியம் 1:56 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 12:13 வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : முகூர்த்தநாள், மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு.

மேஷம்: சுயகவுரவத்தை சோதிக்கும் விதமாக சிலர் பேசுவர். தொழில், வியாபாரத்தில் போட்டியை சரிசெய்வீர்கள் பணவரவை விட செலவு அதிகரிக்கும். சத்து நிறைந்த உணவு உண்பது அவசியம். பிள்ளைகளால் உதவி உண்டு.

ரிஷபம்: கடந்த கால அனுபவம் நல்ல படிப்பினையை தரும். தொழில் சார்ந்த அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார். பெண்களுக்கு திடீர் செலவால் சேமிப்பு கரையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பரின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: பணிகளில் குளறுபடி ஏற்படலாம் கவனம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

கடகம்: நண்பர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகும். தொழில், வியாபார இலக்கு எளிதில் பூர்த்தியாகும். லாபம் பன்மடங்கு உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: மற்றவர் அவதுாறு கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பினால் தொழிலில் வருமானம் உயரும். பணியாளர்க் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது.

கன்னி: பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

துலாம்: மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். இடையூறுகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். நிலுவைப் பணம் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருச்சிகம்: எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

தனுசு: குடும்பத்தேவையை நிறைவேற்ற தாமதமாகலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவை. மிதமான பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பாதுகாப்பது நல்லது.

மகரம்: மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். லாபம் கூடும். தான தர்மத்திற்கு செலவு செய்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கும்பம்: குடும்ப பிரச்னையை பேசித் தீர்ப்பது நல்லது. பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். ஓரளவு வருமானம் கிடைக்கும். மனைவியின் கருத்துக்கு மதிப்பளிப்பது அவசியம்.

மீனம் : மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சோர்வுக்கு ஆளாவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 10/07/2018

இன்று! விளம்பி வருடம், ஆனி மாதம் 26ம் தேதி, ஷவ்வால் 25ம் தேதி,0 10.7.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: