Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/06/2019

இன்றைய நாள் எப்படி 11/06/2019

 

மேஷம்: பேச்சில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். பணவரவின் அளவு குறையலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பெண்கள் நகை இரவல் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

ரிஷபம்: உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்பு அவசியம். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் புத்துணர்வு பிறக்கும்.

மிதுனம்: செயல்களில் கவனச் சிதறல் ஏற்படலாம். மனைவியின் ஆலோசனை நன்மை அளிக்கும். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்

கடகம்: பேச்சு, செயலில் விவேகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் சிறந்து, புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவில் லாப விகிதம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்

சிம்மம்: பணிகளில் சிரமம் ஏற்படலாம்; கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு ஆரோக்கியம் தரும்

கன்னி: குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் சிரமம் ஓரளவு குறையும். அளவான பணவரவு கிடைக்கும்.. ரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்

துலாம்: உங்களின் சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்ட சூழ்நிலை மெல்ல சரியாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்க வேண்டும. சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்

விருச்சிகம்: உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்

தனுசு: எந்த செயலையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி, எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை ஏற்படும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்

மகரம்: சிலர் பொறாமையினால் பரிகாசம் செய்வர். அவர்களிடம் விலகிச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகலாம். அளவான பணவரவு கிடைக்கும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்

கும்பம்: இடையூறு செய்பவரை அறிந்து கொள்வீர்கள்; மன்னித்து சொந்தப்பணியில் ஈடுபடுவீர்கள். .தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். சராசரி பணவரவு கிடைக்கும. அரசு அனுகூலம் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும்

மீனம்: நல்லோரின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். புதிய திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: