Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/05/2019

இன்றைய நாள் எப்படி 11/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 27ம் தேதி, ரம்ஜான் 4ம் தேதி, 11.5.19 சனிக்கிழமை வளர் பிறை, சஷ்டி திதி இரவு 9:32 வரை; அதன்பின் சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் பகல் 2:19 வரை; அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்த மரணயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00 – 10:30 மணி
ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி
குளிகை : காலை 7:30 – 9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்
பொது : சஷ்டிவிரதம், முருகன், மகாலட்சுமி வழிபாடு. முகூர்த்தநாள்.

 

மேஷம் : நண்பர், உறவினரின் செயலை விமர்சிக்க கூடாது. மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில், வியாபார நிலை மந்த கதியில் இருக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. அதிக பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

ரிஷபம் : இனிய பேச்சால் நன்மை பெறுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல அபிப்ராயம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம் : அறிமுகம் இல்லாத எவருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். உடல்நலம் ஆரோக்கிய பலம் பெற சத்து நிறைந்த உணவு உண்பது நல்லது.

கடகம் : மனதில் கூடுதல் உற்சாகம் கொள்வீர்கள். பணிகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதில் பூர்த்தியாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்தில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம் : புதியவரை நண்பராக ஏற்பதில், அதிக கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் வருகிற குறுக்கீடுகளை சரி செய்வதால், வளர்ச்சி சீராகும். முக்கிய செலவுக்கு சிறு அளவில் பணக்கடன் பெறுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

கன்னி : புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். இனிய அணுகுமுறையால், எதிர்பார்த்ததைவிட அதிக நன்மை கிடைக்கும். தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

துலாம் : சமூகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். சிரமங்களை சமாளித்து புதிய சாதனை புரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திருப்தி அளிக்கும்; நிலுவைப் பணம் வசூலாகும் .அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்க அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த பிரச்னையை பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சரியாகும். அதிக பயன்தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். உடல்நலம் சீராக இருக்கும்.

தனுசு : செயல்களின் மூலம் புகழ் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். கடினப்பணிகளில் தற்காப்பு முறை பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் உள்ள குளறுபடி சரி செய்வதால், வளர்ச்சி சீராகும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

மகரம்: உங்கள் செயல்களில் அன்பு நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம் : உறவினர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவு திருப்தியளிக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம் : தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால், உடல்நலம் சீராகும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: