Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/04/2019

இன்றைய நாள் எப்படி 11/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 28ம் தேதி, ஷாபான் 5ம் தேதி,
11.4.19, வியாழக்கிழமை வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 12:42 வரை;
அதன் பின் சப்தமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 8:37 வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : சஷ்டி விரதம், முருகன், தட்சணாமூர்த்தி வழிபாடு.

 

மேஷம்: பொறுமையுடன் செயல்படுவீர்கள். தொல்லை கொடுத்தவர் இடம் மாறிச் செல்வர். தொழில், வியாபார வளர்ச்சியால் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். எதிர்கால தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு உதவி பெற அனுகூலம் உண்டு.

ரிஷபம்: நன்றி இல்லாதவருக்கு உதவும் நிலை வரலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவுக்கேற்ப செலவைத் திட்டமிடுவீர்கள். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். சுற்றுப்புற சூழலால் துாக்கம் கெடலாம்.

மிதுனம்: நினைத்ததை உடனே செயல்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். மனைவி விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.

கடகம்: சமூக நிகழ்வுகள் அதிருப்தி தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பால் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்கள் குடும்பநலனுக்காகப் பாடுபடுவர்.

சிம்மம்: உழைப்பின் அருமையால் பாராட்டு பெறுவீர்கள். நண்பர், உறவினர்களால் உதவி உண்டு. .தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் பன்மடங்கு கிடைக்கும்.வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்வீர்கள்.

கன்னி: செயலில் நியாயம், தர்மத்தை கடைபிடிப்பீர்கள். பலரும் உங்கள் மீது நல்லெண்ணம் கொள்வர்.தொழில், வியாபார வளர்ச்சி முன்னேற்றம் தரும். கூடுதல் பணவரவால் சேமிப்பு உயரும். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்.

துலாம்: சிலரது பேச்சு மனதிற்கு சங்கடம் தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, கூடுதல் நேரம் பணிபுரிவது அவசியம். பெண்களுக்கு பணவரவை விட வீட்டுச் செலவு அதிகரிக்கும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்: வழக்கத்திற்கு மாறான பணியால் தொந்தரவு ஏற்படும். தொழில், வியாபாரம் செழிக்க நண்பரின் உதவி கிடைக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

தனுசு: வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும். பகைவரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். ஆதாயம் பன்மடங்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விவகாரத்தில் அனுகூலம் ஏற்படும்.

மகரம்: நட்பின் பெருமையை உணருவீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும்.தொழில், வியாபாரம் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

கும்பம்: பொது இடங்களில் நிதானித்து பேச வேண்டும்.தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும்.புதிய இனங்களில் செலவு ஏற்படலாம்.உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும்.

மீனம்: சமூகத்தில் நற்பெயரை பாதுகாத்துக் கொள்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் பணிபுரிவீர்கள். பிள்ளைகளின் வழியில் திடீர்செலவு ஏற்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: