Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/03/2019

இன்றைய நாள் எப்படி 11/03/2019

இன்று!

விளம்பி வருடம், மாசி மாதம் 27ம்; தேதி, ரஜப் 3ம் தேதி,
11.3.19 திங்கட்கிழமை வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 2:25 வரை;
அதன்பின் சஷ்டி திதி, பரணி நட்சத்திரம் இரவு 2:01 வரை;
அதன் பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த–மரணயோகம்

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
பொது : சிவன் வழிபாடு.

மேஷம் : பணிகளை நேர்த்தியுடன் விமரிசையாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப் பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். உடன் பிறந்தவருக்கு உதவுவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : சமயோசிதமாக செயல்படுவதால் நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவது அவசியம். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம் : நண்பரின் உதவியால் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கடகம் : சமூகப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தெய்வ அனுகூலத்தால் முக்கிய செயல் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

சிம்மம் : தன்மானத்திற்கு சோதனை வரலாம். தொழில், வியாபாரம் சார்ந்த இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு பின்பற்றுவதால் உடல்நலம் பாதுகாக்கலாம்.

கன்னி : செயலில் கவனச் சிதறல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவு பெறுவதில் இதமான அணுகுமுறை நல்லது. அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் வேண்டும்.

துலாம் : மன தைரியத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகர வளர்ச்சி உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம் : நிகழ்வுகள் இனிதாக அமைந்து அனுகூலபலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவில் லாப விகிதம் அதிகரிக்கும். நண்பர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு : நண்பர் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தாமதமாகலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்ப தேவைகளுக்கான செலவு அதகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.

மகரம் : நற்செயலை சிலர் பரிகசித்து பேசுவர். சுயகவுரவம் பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் முக்கியமான செலவுகளுக்கு பயன்படும்.

கும்பம் : தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். சுபசெய்தி வந்து சேரும். பெண்கள் புத்தாடை நகை வாங்க அனுகூலம் உண்டு.

மீனம் : எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரம் சீர்பெற சில மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: