Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/02/2019

இன்றைய நாள் எப்படி 11/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 28ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 5ம் தேதி, 11.2.19 திங்கட்கிழமை வளர்பிறை, சஷ்டி திதி காலை 11:49 வரை; அதன்பின் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம் மாலை 5:53 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம்,சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
* குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி
* சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
* பொது : சஷ்டி விரதம், முருகன் வழிபாடு

 

மேஷம் : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் பெற அடிப்படையில் சில மாற்றம் செய்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் பின்பற்ற வேண்டும்..

ரிஷபம் : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை அத்தியாவசிய செலவுக்கு பயன்படுத்துவீர்கள். காலக்கெடு தவறிய உணவுப் பொருள் கவன குறைவால் வாங்குகிற நிலை ஏற்படலாம்.

மிதுனம் : சமூக சிந்தனையுடன் பணிபுரிவீர்கள். நண்பர், உறவினர் பாராட்டுவர். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். தாராள பணவரவில் குடும்பத் தேவை பூர்த்தியாகும். உடல்நல ஆரோக்கியம் சீராகும்.

கடகம் : மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்படும். தொழில், வியாபாரம் செழித்து திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். உபரி பணவரவில் கொஞ்சம் தான தர்மத்திற்கு செலவு செய்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

சிம்மம் : சிலர் பிறரை விமர்சிக்க உங்களைத் தூண்டுவர். தேவையற்ற விவகாரம் பேசுவதை தவிர்ப்பதால் பணி ஓரளவு நிறைவேறும். தொழில், வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது நல்லது.

கன்னி : மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். அதிக உழைப்பினால் உற்பத்தி விற்பனையின் அளவு சீராகும். பணவரவுக்கேற்ப புதிய செலவினங்களும் உருவாகும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மிகத்தேவையாகும்.

துலாம் : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருச்சிகம் : இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும். எதிர்ப்பு மாறி அனுகூலமாக மாறும்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் உழைப்பீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு : நற்செயலை சிலர் கேலி, கிண்டல் செய்வர். பணியில் தகுந்த அக்கறை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். சீரான ஓய்வு உடல்நலம் காக்க உதவும்.

மகரம் : முக்கிய செயல் ஒன்று நிறைவேற தாமதமாகலாம். கடந்தகால அனுபவம் நல்ல படிப்பினையைத் தரும். தொழில், வியாபாரத்தில் பெற்ற அனுகூலத்தை தகுந்த அக்கறையுடன் பாதுகாப்பீர்கள். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.

கும்பம் : முக்கியமான செயலை அடுத்தவரிடம் தர வேண்டாம். தொழிலில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். செலவுகளில் திட்டமிடுவது நல்லது. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

மீனம் : அடுத்தவரின் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க வேண்டாம்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/04/2019

இன்று! விகாரி வருடம், சித்திரை மாதம் 2ம் தேதி, ஷாபான் 9ம் தேதி, 15.4.19, திங்கட்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: