Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 11/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 26ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 15ம் தேதி,
11.1.20 சனிக்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி நள்ளிரவு 12:22 வரை,
அதன் பின் துவிதியை திதி, புனர்பூசம் நட்சத்திரம் பகல் 2:54 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: காலை 9:00-10:30 மணி
எமகண்டம்: பகல் 1:30-3:00 மணி
குளிகை: காலை 6:00-7:30 மணி
சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
பொது: சனீஸ்வரர் வழிபாடு.

 

மேஷம்: சுய அந்தஸ்து காப்பதில், கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி, விற்பனை சீராக வளரும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

ரிஷபம்: புதிய நம்பிக்கை ஏற்படும். மாற்றாரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் வளரும்.

மிதுனம் : பிறருக்கு உதவுவதால் மறைமுக சிரமம் ஏற்படலாம். பணிகளில் சுறுசுறுப்பு அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

கடகம்: சிறிய முயற்சி, அதிக வெற்றியைத் தரும். விலகிய நண்பர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : சிலர் சொல்லும் அறிவுரை சங்கடத்தை உருவாக்கும். மனசாட்சிக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு, அதிகமாக பணிபுரிவது அவசியம். வரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

கன்னி : உழைப்பின் அருமையை உறவினர் பாராட்டுவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வாங்குவர்.

துலாம்: எதிரிகள் இடம் மாறி போவார். தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்கும்.

விருச்சிகம்: பொது பிரச்னையில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இலக்கை அடைய கூடுதல் பணிபுரிவீர்கள். புதிய இனங்களில் செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு: வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருள் வாங்க வேண்டாம். மாணவர்கள், படிப்பில் புதிய பயிற்சி பெறுவர்.

மகரம் : செயல்களில் நியாயத்தை பின்பற்றுவீர்கள். பலரும், உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். ஊட்டச்சத்தான உணவினை உண்டு மகிழ்வீர்கள்.

கும்பம் :உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மீனம்: எதார்த்த பேச்சு, பிறர் மனதை சங்கடப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். புதிய இனங்களில் செலவு ஏற்படலாம். மருத்துவ சிகிச்சை உடல் நலம் பெற உதவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/07/2020

இன்று! சார்வரி வருடம், ஆனி மாதம் 27ம் தேதி, துல்ஹாதா 19ம் தேதி, 11.7.2020 சனிக்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி ...