Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 1/02/2019

இன்றைய நாள் எப்படி 1/02/2019

இன்று!
விளம்பி வருடம், தை மாதம் 18ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 25ம் தேதி,
1.2.19 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி இரவு 9:40 வரை;
அதன் பின் திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம் இரவு 11:36 வரை;
அதன் பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : முகூர்த்தநாள், மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம் : பொறுமையுடன் செயல்படுவது அவசியம். தொழில் சார்ந்த குறையை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அரசு அனுகூலம் கிடைக்க தாமதம் ஆகலாம்.

ரிஷபம் : வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. குடும்ப உறுப்பினர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர். தொழில் வியாபார வளர்ச்சி படிப்படியாக முன்னேறும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் ஏற்படும்.

மிதுனம் : செயல்களை நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். மனதில் நிம்மதியும், பெருமிதமும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பிள்ளகைள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

கடகம்: பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் ஆதரவில் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

சிம்மம் : சிலரது அவசியமற்ற பேச்சு சங்கடம் உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.

கன்னி : முக்கிய செயலை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவு பெறுவதில் இதமான அணுகுமுறை அவசியம். நண்பரால் சில அனுகூலம் உண்டு. மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

துலாம் : செயல் திறமையை முழு அளவில் பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்ப்பு வந்த சுவடு தெரியாமல் விலகும்.

விருச்சிகம் : பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை கவனமுடன் பாதுகாக்கவும். திட்டமிட்டதை விட கூடுதல் செலவு ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும்.

தனுசு : உயர்ந்த செயல்களால் நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உருவாகும். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மகரம் : பணியில் மாற்றம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அக்கறையுடன் செயல்பட வேண்டும். சேமிப்புப்பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை மனதில் நம்பிக்கை தரும்.

கும்பம் : பணிகளில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். உபரி பணவரவில் சேமிப்பு கூடும். மனைவி அன்பு, பாசத்துடன் குடும்பநலன் பேணுவார். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மீனம் : மிகுந்த மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். சிறிய முயற்சியும் அதிக அளவில் நன்மையை தரும். தொழிலில் அபிவிருத்தி செய்ய தகுந்த பணவசதி கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: