Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/01/2019

இன்றைய நாள் எப்படி 13/01/2019

இன்று!
விளம்பி வருடம், மார்கழி மாதம் 29ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 6ம் தேதி,
13.1.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, சப்தமி திதி இரவு 8:00 வரை;
அதன்பின் அஷ்டமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 8:06 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
பொது : சூரியன் வழிபாடு.

மேஷம் : சிரமங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கை தரும். அதிக உழைப்பு தொழில், வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை உண்டாக்கும். நிலுவைப் பணம் ஓரளவு வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

ரிஷபம் : பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம் : பலரும் அன்பு பாராட்டுவர். மனதில் புதிய உத்வேகம் உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்

கடகம் : நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். சீரான அளவில் பணவரவு இருக்கும். உறவின

சிம்மம் : கடந்தகால சிரமங்கள் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல்களில் முன்யோசனை அவசியம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.ர்களிடம் விவாதம் பேசக் கூடாது. அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

கன்னி : பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள்.
துலாம் : உடல் ஆரோக்கியம் பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். போட்டி பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.

விருச்சிகம் : செயல்களில் அக்கறையும் கவனமும் வேண்டும். மனைவியின் ஆலோசனை நல்வழி நடத்தும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனநடை பின்பற்ற வேண்டும்.

தனுசு : புகழ்ச்சியை மனம் விரும்பும். செயல் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் சிறு குளறுபடி வந்து பின்னர் சரியாகும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மகரம் : சிரமமான சூழ்நிலை மாறிவிடும். எண்ணத்திலும், செயலிலும் உத்வேகம் பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். கடன் செலுத்துவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை உருவாக்கும்.

கும்பம் : நலனுக்கு எதிராக செயல்பட்டவரை எதிர்கொள்ள நேரிடலாம். பெருந்தன்மையுடன் விலகுவதால் நிலைமை சீராகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி ஓரளவு நிறைவேறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம் : சமூகத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். வெகுநாள் லட்சியத்தை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

 

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 27/05/2020

இன்று! சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...

%d bloggers like this: