Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/10/2019

இன்றைய நாள் எப்படி 10/10/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 23ம் தேதி, ஸபர் 10ம் தேதி,
10.10.19 வியாழக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 9:21 வரை;
அதன்பின் திரயோதசி திதி, சதயம் நட்சத்திரம் அதிகாலை 4:15 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மகம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம் : மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தவருடன் கூடுதல் அன்பு வளரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும்.

ரிஷபம் : பிறரை வசீகரிக்கின்ற அளவில் உங்கள் செயல் திறன் வளரும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். பண வரவில் லாப விகிதம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க நல்ல யோகம் உண்டு.

மிதுனம் : அத்தியாவசிய பணி ஒன்றை மறந்து விடுவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். புதிய இனங்களில் பண செலவு வரலாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

கடகம்: மனதில் விரக்தி எண்ணம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி சுமை உருவாகும். பணவரவை முக்கியமான செலவுக்கு பயன்படுத்துவீர்கள். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். குடும்ப உறுப்பினர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர்.

சிம்மம் : உங்கள் இஷ்ட தெய்வ அருளினால் புதிய முயற்சி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் அந்தஸ்து கூடும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்ப உறுப்பினர்களின் அன்பு, பாசத்தில் மகிழ்வீர்கள்.

கன்னி : பிறருக்கு உதவுவதில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி சிறப்பாக நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

விருச்சிகம்: மனதில் குழப்பமான சிந்தனை உருவாகும். முக்கியமான பணியை தனி கவனத்துடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு அவசியம். நித்திரை தாமதமாகலாம்.

தனுசு: உங்களுக்கு எதிரியால் உருவான தொல்லை விலகும். செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

மகரம் : உங்களின் குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணி அறிந்து நிறைவேற்றுவது நல்லது. எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். காலமுறை உணவு பழக்கம் உடல் நலம் பாதுகாக்க உதவும்.

கும்பம் : உங்கள் அன்புக்குரியவரின் தேவைக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். உற்பத்தி, விற்பனை செழிக்கும். சுப செய்தி வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.

மீனம் : குடும்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். அத்தியாவசிய தேவைக்கு பணம் கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/04/2020

இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 29.4.2020 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி ...

%d bloggers like this: