Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 10/10/2018

இன்றைய நாள் எப்படி 10/10/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 24ம் தேதி, மொகரம் 29ம் தேதி,
10.10.18 புதன்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 8:40 வரை;
அதன் பின் துவிதியை திதி, சித்திரை நட்சத்திரம் மதியம் 1:01 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சந்திர தரிசனம், சிவன் வழிபாடு, நவராத்திரி ஆரம்பம்,
கொலு வைக்க நல்லநேரம் காலை 9:00- 10:30 மணி.
அம்பிகையை மகேஸ்வரியாக வழிபடுதல்.

மேஷம்: இஷ்ட தெய்வ அருளால் வாழ்வு சிறக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவால் சலுகை கிடைக்கும்.

ரிஷபம்: நண்பர், உறவினரின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். அபரிமிதமான லாபம் கிடைக்கும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீ்ரகள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.

மிதுனம்: அதிக வேலைப்பளுவால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையளிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

கடகம்: பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் பொறுப்பால் சிரமத்திற்கு ஆளாகலாம். வருமானம் எதிர்பார்த்ததை விட சற்று குறையலாம். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பரால் உதவி உண்டு.

சிம்மம்: பேச்சிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் இருந்த சிரமம் குறையும். ஆதாயம் கூடும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர். மாமன் மைத்துனரின் தேவையறிந்து உதவுவீர்கள்.

கன்னி: சொந்த நலனில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து பணிபுரிய வேண்டும்.

துலாம்: சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்ப பிரச்னையில் சுமூகமான தீர்வு கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.

விருச்சிகம்: எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்க தாமதம் ஆகலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணவிஷயத்தில் விழிப்புடன் செயல்படவும். உணவுப் பொருள் தரமறிந்து உண்பது நல்லது.

தனுசு: எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் மனதார பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். இயன்ற அளவில் தான தர்மம் செய்வீர்கள். பெண்களுக்கு பொன், பொருள் சேரும்.

மகரம்: சாதனை நிகழ்த்த உரிய வாய்ப்பு தேடி வரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணி செய்து பாராட்டு பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கும்பம்: உங்களை சிலர் அவமதித்து பேசுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். நண்பரால் உதவி கிடைக்கும்.

மீனம்: அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளின் நற்செயலால் ஆறுதல் காண்பீர்கள்.

 

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 14/06/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 31ம் தேதி, ஷவ்வால் 10ம் தேதி, 14.6.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி ...

%d bloggers like this: