Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/08/2019

இன்றைய நாள் எப்படி 10/08/2019

மேஷம் : உங்கள் குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மை தரும்.தொழில், வியாபாரத்தில் சிரமம் ஓரளவு குறையும். அளவான பணவரவு கிடைக்கும்.சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

ரிஷபம் : உங்களின் தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி நிறைவேறும்.தாராள அளவில் பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மிதுனம் : நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்து கிடைக்கும்.செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும்.தாராள பணவரவு உண்டு. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : சிலர் உங்களிடம் உதவி கேட்டு அணுகுவர். இயன்ற அளவில் உதவி புரிந்து நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

சிம்மம் : மனதில் நிதானம் பின்பற்றுவது அவசியம்.தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் பணிபுரிவீர்கள்.பணவரவின் அளவு குறையலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க கூடாது.

கன்னி : தாயின் அன்பு, ஆசி பலமாக கிடைக்கும்.சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத் தொடர்பு பலம் பெறும்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

துலாம் : எதார்த்தமாக பழகுவீர்கள். நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்க வேண்டும்.முக்கிய செலவுகளுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். பெண்கள் தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : கடந்த நாட்களில் இருந்த சிரமம் விலகும். செயல்களில் உத்வேகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி இனிதே நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

தனுசு : சிலர், உங்களை ஒரு கருவியாக பயன்படுத்த எண்ணுவர். கவனமுடன் பேசுவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய புதியமுயற்சி வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும்.வாகனத்தில் மிதவேகம் நல்லது.

மகரம் : சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். உங்களின் தனித்திறமை செயல்கள் சிறப்பு பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். நிலுவைப் பணம் வசூலாகும்.குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் : சந்தோஷ எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய அனுகூலம் உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள்.

மீனம் : உங்களின் தன்மான குணத்துக்கு சோதனை வரலாம்.மனஅமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்விர்கள். அளவான பணவரவு கிடைக்கும். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 04/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 18ம் தேதி, ரபியுல் ஆகிர் 6ம் தேதி, 4.12.19 புதன்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: