Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/05/2019

இன்றைய நாள் எப்படி 10/05/2019

இன்று!
விகாரி வருடம், சித்திரை மாதம் 26ம் தேதி, ரம்ஜான் 3ம் தேதி,
10.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 11:38 வரை;
அதன்பின் சஷ்டி திதி, திருவாதிரை நட்சத்திரம் பகல் 3:33 வரை;
அதன்பின், புனர்பூசம் நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10:30 – 12:00 மணி
ராகு காலம் : பகல் 1:30 – 3:00 மணி
எமகண்டம் : காலை 6:00 – 7:30 மணி
குளிகை : காலை 9:00 – 10:30 மணி
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
பொது :தட்சிணாமூர்த்தி வழிபாடு, ஆதிசங்கரர் ஜெயந்தி.

 

மேஷம் : மனதில் உற்சாகம் மிகுந்திருக்கும். வெகுநாள் திட்டமிட்ட நற்காரியம் நிறைவேறும் சூழல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் பயன்படுத்துவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

ரிஷபம்: ரசனையுடன் செயல் ஒன்றை நிறைவேற்றுவீர்கள்; குடும்ப உறுப்பினர்கள் மனமுவந்து பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். பணப்பரிவர்த் தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணிபுரிவோருக்கு தாமதமான சலுகை வந்து சேரும்.

மிதுனம்: உங்களுக்கு உதவுவது போல ஒருவர் பாசாங்கு செய்வார். சொந்த உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். வரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கடகம்: சமயோசித குணத்துடன் செயல்படுவீர்கள். நல்ல விசயங்களை பேசுவதில் ஆர்வம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும்.

சிம்மம்: சிலரது செயல் உங்கள் மனதில் அதிருப்தியை உருவாக்கலாம். பணிகளில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அவசியமற்ற பணச்செலவு தவிர்ப்பீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

கன்னி: செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். திட்டமிட்ட பணிகளால் தொழில், வியாபார த்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலத் தீர்வு ஏற்படும்.

துலாம்: சிறு செயல் கூட பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் கவனத்துடன் பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். வீட்டு உபயோகப்பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம் : சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

தனுசு: உங்கள் செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும், அக்கறையும் தேவை. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் அதிக பணம் செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் நல்லது.

மகரம்: மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். கூடுதல் அக்கறையுடன் பணியாற்றுவீர்கள். தொழில், வியாபாரம் சிறந்து முக்கியஸ்தரின் பாராட்டு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

கும்பம்: குடும்ப பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவும், நன்மையும் உருவாகும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

மீனம்: உங்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: