Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/04/2019

இன்றைய நாள் எப்படி 10/04/2019

இன்று!
விளம்பி வருடம், பங்குனி மாதம் 27ம் தேதி, ஷாபான் 4ம் தேதி,
10.4.19, புதன்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மதியம் 2:14 வரை;
அதன் பின் சஷ்டி திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 9:18 வரை;
அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கேட்டை
பொது : வசந்த பஞ்சமி, அம்பிகை வழிபாடு, முகூர்த்தநாள்

மேஷம்: சுயலாபத்திற்காக சிலர் உதவ முன்வருவர். பணக்கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில்,வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் வளர்ச்சி காண்பீர்கள். தியானம், தெய்வ வழிபாட்டால் மனதில் நிம்மதி நிலைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக் கூடாது.

ரிஷபம்: கடந்த கால நற்செயலால் நன்மை காண்பீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மிதுனம்: அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

கடகம்: தியாக மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். வருமானம் சீராக இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

சிம்மம்: வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான பணவரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். அரசியல்வாதிகள் பதவி பெற வாய்ப்புண்டு.

கன்னி: எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பெண்களுக்கு அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு.

துலாம்: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். மூலதன தேவைக்காக கடன் வாங்க நேரிடும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

விருச்சிகம்: முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள்.தாராள பணவரவு கிடைக்கும்.கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும்.உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு: லட்சிய நோக்கத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

மகரம்: கூடுதல் பணிகளால் சிரமம் ஏற்படலாம். திட்டமிட்டு செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெறும். பணவரவு சீராக இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்கக் கூடாது. நண்பர்களால் உதவி உண்டு.

கும்பம்: நண்பரின் எதார்த்த பேச்சு சங்கடம் ஏற்படுத்தும்.தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவு மிதமாக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். பெண்களுக்கு கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்: மனதில் உற்சாகம் மேலோங்கும் தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல்நேரம் பணிபுரிவீர்கள். பெண்கள் முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பணியாளர்கள் சலுகை பெறுவர். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/06/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: