Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/03/2019

இன்றைய நாள் எப்படி 10/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 26ம்; தேதி, ரஜப் 2ம் தேதி,
10.3.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 2:32 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, அசுவினி நட்சத்திரம் இரவு 1:28 வரை;
அதன் பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
பொது : சதுர்த்தி விரதம். விநாயகர், சூரியன் வழிபாடு.

 

மேஷம் : வெகுநாள் திட்மிட்ட முக்கியமான செயல் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

ரிஷபம் : அணுகுமுறை எளிமையாக இருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அக்கறையுடன் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மிதுனம் : நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

கடகம் : சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப பிரச்சனையில் சாதகமான தீர்வு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

சிம்மம் : முக்கிய செயல் தாமதமாகலாம். தொழில், வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் புத்துணர்வு தரும்.

கன்னி : புதியவர்கள் உதவி கேட்பர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவு அளவுடன் இருக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

துலாம் : செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடைந்து நம்பிக்கையைத் தரும். தாராள பணவரவில் கொஞ்சம் அறப்பணி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

விருச்சிகம் : பலரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். காணாமல் தேடிய பொருள் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

தனுசு : முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். செலவில் சிக்கனம் வேண்டும். நீண்டதூர பயணங்களில் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் : நன்கு பழகியவர்களிடமும் பேசுவதில் நிதானம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.

கும்பம் : எதிரி இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத் தேவை திருப்திகரமாக நிறைவேறும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர்.

மீனம் : முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர சில மாற்றம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: